ஓ.எம்.ஆர்., 'யு' வடிவ பால பணி 'விறுவிறு'டிசம்பர் மாதம் திறக்க பணி வேகம்

Added : செப் 20, 2022 | |
Advertisement
சென்னை, போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஓ.எம்.ஆரில், டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் சந்திப்பில், 108 கோடி ரூபாயில், இரண்டு 'யு' வடிவ மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன.இதில், இந்திரா நகர் பாலத்தை டிசம்பர் மாதம் திறக்கும் வகையில், சாலை மேம்பாட்டு நிறுவனம் நடவடிக்கை எடுத்து உள்ளது.சென்னையின் முக்கிய சாலையாக, ஓ.எம்.ஆர்., உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க, டைடல் பார்க்
ஓ.எம்.ஆர்., 'யு' வடிவ பால பணி 'விறுவிறு'டிசம்பர் மாதம் திறக்க பணி வேகம்



சென்னை,
போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஓ.எம்.ஆரில், டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் சந்திப்பில், 108 கோடி ரூபாயில், இரண்டு 'யு' வடிவ மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன.இதில், இந்திரா நகர் பாலத்தை டிசம்பர் மாதம் திறக்கும் வகையில், சாலை மேம்பாட்டு நிறுவனம் நடவடிக்கை எடுத்து உள்ளது.சென்னையின் முக்கிய சாலையாக, ஓ.எம்.ஆர்., உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க, டைடல் பார்க் சிக்னல் மற்றும் இந்திரா நகர் சிக்னல் ஆகிய இடங்களில் 'யு' வடிவ மேம்பாலம் அமைக்க, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் திட்டமிட்டது.

இதற்காக, 108 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.டைடல் பார்க் சந்திப்பில், மத்திய கைலாஷ் மற்றும் திருவான்மியூரில் இருந்து சி.எஸ்.ஐ.ஆர்., சாலை வரை, 2,000 அடி நீளம், 30 முதல் 40 அடி அகலம் வரை, ஒரு பாலம் அமைகிறது.மேலும், மத்திய கைலாஷ் திசையில் இருந்து செல்லும் வாகனங்கள், டைடல் பார்க் சிக்னலில் 'யு' டர்ன் செய்து, மீண்டும், மத்திய கைலாஷ் நோக்கி திரும்பும் வகையில், 1,000 அடி நீளம், 30 அடி அகலத்தில், மேம்பாலம் அமைய உள்ளது. இரு பாலங்களும் ஒன்றோடு மற்றொன்று இணைத்து கட்டப்படுகிறது.

அதேபோல், இந்திரா நகர் சிக்னல் அருகில், 1,000 அடி நீளம், 35 அடி அகலத்தில் மற்றொரு 'யு' வடிவ மேம்பாலம் கட்டப்பட உள்ளது.டைடல் பார்க் சந்திப்பில் இருந்து, அடையாறு நோக்கி செல்வோர் இந்த மேம்பாலத்தை பயன்படுத்தும் படி அமைகிறது. டைடல் பார்க் சந்திப்பு மேம்பால பணி, 40 சதவீதமும், இந்திரா நகர் மேம்பாலம், 75 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதில், இந்திரா நகர் மேம்பால பணியை விரைந்து முடித்து, டிசம்பர் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என, சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் கூறினர்.மேம்பாலம் பணி முடிந்ததும், இந்திராநகர் சிக்னல் அகற்றப்படும். இரண்டு மேம்பாலங்கள் பயன்பாட்டுக்கு வந்ததும், டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் சந்திப்பில், வாகன நெரிசல் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X