சாலையோர பேனர்கள் அதிரடி அகற்றம்: இனி வைக்க முறையான அனுமதி வேண்டும்| Dinamalar

சாலையோர பேனர்கள் அதிரடி அகற்றம்: இனி வைக்க முறையான அனுமதி வேண்டும்

Added : செப் 20, 2022 | |
தொண்டாமுத்தூர்:பேரூர் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், சாலையோரங்களில் வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் பேனர்களை, போலீசாரும், உள்ளாட்சி நிர்வாகத்தினரும் இணைந்து அகற்றினர்.பேரூர் உட்கோட்டத்திற்குட்பட்டு, வடவள்ளி, தொண்டாமுத்தூர், காருண்யா நகர், ஆலாந்துறை, பேரூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, கே.ஜி.சாவடி ஆகிய எட்டு போலீஸ் ஸ்டேஷன் உள்ளன. இங்குள்ள சாலை ஓரங்களில், அனுமதி
சாலையோர பேனர்கள் அதிரடி அகற்றம்: இனி வைக்க முறையான அனுமதி வேண்டும்

தொண்டாமுத்தூர்:பேரூர் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், சாலையோரங்களில் வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் பேனர்களை, போலீசாரும், உள்ளாட்சி நிர்வாகத்தினரும் இணைந்து அகற்றினர்.பேரூர் உட்கோட்டத்திற்குட்பட்டு, வடவள்ளி, தொண்டாமுத்தூர், காருண்யா நகர், ஆலாந்துறை, பேரூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, கே.ஜி.சாவடி ஆகிய எட்டு போலீஸ் ஸ்டேஷன் உள்ளன.

இங்குள்ள சாலை ஓரங்களில், அனுமதி இல்லாமல் பலரும், கட்சி பேனர்கள், வணிக விளம்பர பேனர்கள் மற்றும் இதர பேனர்களை வைத்திருந்தனர். இதனால், பல இடங்களிலும், போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் சாலை விபத்து ஏற்பட்டு வந்தது. இது குறித்து நமது நாளிதழிலும், தொடர்ந்து பல முறை செய்தி வெளியிடப்பட்டது.


இந்நிலையில், பேரூர் உட்கோட்டத்திற்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளில் உள்ள சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி பேனர்கள், இதர இயக்கங்கள், வணிக நிறுவனங்கள், தனி மனிதர்கள் வைத்திருந்த பேனர்களை, போலீசார், பேரூராட்சி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம், வருவாய்த்துறையினர் இணைந்து அகற்றினர்.இது குறித்து, பேரூர் டி.எஸ்.பி., ராஜபாண்டியன் கூறுகையில், "எஸ்.பி., பத்ரி நாராயணன் உத்தரவின்படி, சாலையோர பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. இனி, பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டுமெனில், விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக அனுமதி பெற வேண்டும்," என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X