பெண்களிடம் தொடர் வழிப்பறி: நள்ளிரவில் போலீஸ் 'அலசல்'

Added : செப் 20, 2022 | |
Advertisement
திண்டிவனம் : திண்டிவனத்தில் அடுத்தடுத்த இடங்களில் 3 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களைப் பிடிக்க போலீசார் நள்ளிரவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.திண்டிவனம், அம்மன் நகரைச் சேர்ந்தவர் நடராஜன் மனைவி காமாட்சி, 45; சேடன் குட்டை தெருவில் டைலர் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு 7:45 மணிக்கு, கடையை பூட்டிக்கொண்டு, ஸ்கூட்டியில் வீட்டிற்கு சென்று

திண்டிவனம் : திண்டிவனத்தில் அடுத்தடுத்த இடங்களில் 3 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களைப் பிடிக்க போலீசார் நள்ளிரவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

திண்டிவனம், அம்மன் நகரைச் சேர்ந்தவர் நடராஜன் மனைவி காமாட்சி, 45; சேடன் குட்டை தெருவில் டைலர் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு 7:45 மணிக்கு, கடையை பூட்டிக்கொண்டு, ஸ்கூட்டியில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.வட ஆலப்பாக்கம் அருகே சென்றபோது, வண்டியை நிறுத்தி விட்டு மொபைல் பேசியுள்ளார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், காமாட்சியின் இரண்டரை சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.

மேலும், கல்லுாரி சாலையில் பைக்கில் அமர்ந்து சென்ற திண்டிவனத்தைச் சேர்ந்த செல்வம் மனைவி சித்ரா, 42; மற்றும், பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த சம்யுக்தா, 30; ஆகியோர் அணிந்திருந்த செயினை பறிக்க முடியாததால் தப்பினர்.இது குறித்து தகவலறிந்த திண்டிவனம், ரோஷணை போலீசார் அலர்ட் செய்யப்பட்டு, பல்வேறு இடங்களில் வாகன சோதனையை முடுக்கி விட்டனர். இருப்பினும் அந்த நபர்களைப் பிடிக்க முடியவில்லை. ஒரே கும்பல் இரவு நேரத்தில் 3 இடங்களில் வழிபறியில் ஈடுபட்ட சம்பவம் திண்டிவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X