'ப்ளூ' காய்ச்சல் பரவல் அதிவேகம்! சுகாதாரத் துறையினரின் நடவடிக்கை தேவை

Added : செப் 20, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது அதிவேகமாக பரவி வரும் 'ப்ளூ' காய்ச்சலைத் தடுக்க சுகாதாரத் துறையினர் அலட்சியமாக காட்டுவதால், ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் ப்ளூ காய்ச்சல் தற்போது அதிவேகமாக பரவி வருகிறது. கடும் வெயில், அதிக மழை என, பருவநிலை மாற்றத்தின் காரணமாக இந்த காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்
'ப்ளூ' காய்ச்சல் பரவல் அதிவேகம்! சுகாதாரத் துறையினரின் நடவடிக்கை தேவை

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது அதிவேகமாக பரவி வரும் 'ப்ளூ' காய்ச்சலைத் தடுக்க சுகாதாரத் துறையினர் அலட்சியமாக காட்டுவதால், ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் ப்ளூ காய்ச்சல் தற்போது அதிவேகமாக பரவி வருகிறது. கடும் வெயில், அதிக மழை என, பருவநிலை மாற்றத்தின் காரணமாக இந்த காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் தலைவலி, உடல்வலி, மூட்டு வலி என அவதியடைந்து வருகின்றனர்.குறிப்பாக, குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால், ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுக்கும் காய்ச்சல்பரவுகிறது.

இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருமல், சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகின்றனர்.விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மட்டும் நாள்தோறும் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். மேலும், சிலர் மருத்துவமனைக்குச் செல்லாமல், மருந்து கடைகளில் மாத்திரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தற்போது பரவி வருகிறது. ஆனால், இந்த டெங்கு பாதிப்பு குறித்த தகவலை சுகாதாரத் துறையினர் வெளிப்படையாக கூறாமல் ரகசியம் காத்து வருகின்றனர்.இதனால், மக்கள் டெங்கு பாதிப்பில் இருந்து முன்னெச்சரிக்கையாக காத்துக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் அலட்சியமாக உள்ளனர். இதனால் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதேபோன்று, மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு வட்டாரத்திற்கு 20 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீர், பழைய டயர்களில் உள்ள தண்ணீர், காலி வீட்டு மனைகளில் தேங்கும் தண்ணீர் ஆகியவற்றில் கொசுப்புழு உற்பத்தியை கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.ஆனால், மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இதுபோன்று நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபடவில்லை.

மேலும், தற்போது ப்ளூ காய்ச்சல் பாதிக்கப்பட்ட கிராமங்களில் சுகாதாரத்துறை சார்பில் எந்தவித மருத்துவ முகாம்களும் நடத்தவில்லை. சுகாதாரத் துறையினரின் இந்த அலட்சியப் போக்கால், கிராமத்தில் ஒரு சிலருக்கு வரும் வைரஸ் காய்ச்சல், கிராமம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.ஆனால், டெங்கு மற்றும் ப்ளூ காய்ச்சல் தொடர்பாக பொதுமக்களுக்கு எவ்வித விழிப்புணர்வையும் அதிகாரிகள் ஏற்படுத்தவில்லை.

பக்கத்து மாவட்டமான கடலுார் மாவட்டத்தில், வைரஸ் காய்ச்சலைக் கண்டு பொதுமக்கள் பயப்பட வேண்டாம் எனவும், சுகாதாரத் துறையினர் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.இதுபோன்று, விழுப்புரம் மாவட்டத்தில் எந்தவித அறிவிப்பும் வராததால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

எனவே, மாவட்டத்தில் டெங்கு மற்றும் ப்ளூ காய்ச்சலைத் தடுக்க நகரம் மற்றும் கிராமங்களின் அனைத்து பகுதிகளிலும், பொதுமக்கள் வந்து செல்லும் பஸ் நிலையம் மற்றும் பள்ளிகளிலும் சுகாதாரத்துறையினர் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-நமது நிருபர்-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-செப்-202207:51:19 IST Report Abuse
ராஜா அந்த மாசுவை கண்டால் வரச்சொல்லுங்க என்று பாட வேண்டியது தான். எங்காவது தடுப்பூசி முகாம் ரகசியமாக நடத்தப்பட்டு கேள்வி பட்டு இருக்கிறோமா? சென்னையில் சில பூங்காக்களில் வெறும் மருந்து பெட்டியை வைத்துகொண்டு ஒரு சிறு அறிவிப்பு பலகை கூட இல்லாமல் செல்போனில் மட்டும் பேசிக்கொண்டு இருக்கும் சுகாதாரத்துறை சிங்காரிகள் விடியலின் புதிய கண்டுபிடிப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X