பீளமேடு ஏ.டி.காலனியில் 'கடி' தாங்கலை! தெருநாய்கள் தொல்லைக்கு விடிவே இல்லையா?

Added : செப் 20, 2022 | |
Advertisement
கழிவை அப்புறப்படுத்தணும்ரங்கே கவுடர் வீதியில், சாக்கடை துார்வாரப்பட்டது. கால்வாயில் இருந்து எடுக்கப்பட்ட மண் சாலையோரம் கொட்டப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அப்புறப்படுத்தபடாமலே உள்ளது.- சதீஷ்குமார், ரங்கேகவுடர் வீதிபொதுமக்கள் அவதிநீலம்பூர், மைலம்பட்டி, மகாலட்சுமி கார்டன் செல்லும் சாலை, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தெருவிளக்கு வெளிச்சமும் இல்லை.
பீளமேடு ஏ.டி.காலனியில் 'கடி' தாங்கலை! தெருநாய்கள் தொல்லைக்கு விடிவே இல்லையா?


கழிவை அப்புறப்படுத்தணும்



ரங்கே கவுடர் வீதியில், சாக்கடை துார்வாரப்பட்டது. கால்வாயில் இருந்து எடுக்கப்பட்ட மண் சாலையோரம் கொட்டப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அப்புறப்படுத்தபடாமலே உள்ளது.- சதீஷ்குமார், ரங்கேகவுடர் வீதி


பொதுமக்கள் அவதி


நீலம்பூர், மைலம்பட்டி, மகாலட்சுமி கார்டன் செல்லும் சாலை, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தெருவிளக்கு வெளிச்சமும் இல்லை. இதனால், இரவு நேரங்களில் சாலையை கடக்க முடியாமல், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.- கனிஷ்கா, கோவை.


சேதமான மரங்கள்


தீத்திபாளையம் ஊருக்குள் செல்லும் ரோட்டில் இருபுறமும், தனியார் மாட்டுப்பண்ணை நிறுவனம் ஒன்று குப்பை கொட்டி தீ வைத்து வருகிறது. இதனால், சாலையோர மரங்கள் சேதமடைந்து வருகிறது. பஞ்சாயத்தில் பல முறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.- ஜெயபிரகாஷ், தீத்திபாளையம்


பஸ் வந்து ரெண்டு வருசமாச்சு


நீலிக்கோணாம்பாளையத்தில் இருந்து டவுன்ஹால் வழியாக, பூமார்க்கெட் ஜி.சி.டி.பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த 43 என்ற எண் கொண்ட அரசு டவுன் பஸ், கடந்த கொரோனா காலத்தில் இருந்து சுமார் 2 ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ளது. இதனால், இந்த பஸ்சை நம்பி பயணித்து வந்த, பள்ளி கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.- முருகேஷ், நீலிக்கோணாம்பாளையம்


அடிக்கடி விபத்து


ரேஸ்கோர்ஸ், கோவை அரசு கலைக்கல்லுாரி பின்புற நுழைவாயில் அமைந்துள்ள சாலை, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?- ஜெகன், கோவை


மனு கொடுத்தும் பலனில்லை


மாநகராட்சி 92வது வார்டு, பி.கே.புதுார் புதிய பகுதியில், சாக்கடை வசதி இல்லை. நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தும் பயன் இல்லை. குடியிருப்பு நடுவில் இருக்கும் டிரான்ஸ்பார்மர், அடிக்கடி வெடித்து தீப்பற்றி எரிந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இது தொடர்பாக மனு கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை.- குணா, கோவை


சாலையில் ஓடும் கழிவுநீர்


மாநகராட்சி 95வது வார்டு, போத்தனுார் மெயின்ரோட்டில், சாக்கடை கால்வாய் பல மாதங்களாக பராமரிப்பின்றி உள்ளது. சுத்தம் செய்யவும் ஆட்கள் வருவதில்லை. இதனால், கழிவுநீர் நிரம்பி காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் கழிவுநீர் சாலையில் ஓடும் அவலமும் ஏற்பட்டுள்ளது.- நரேஷ், கோவை


தெருநாய்கள் தொல்லை


பீளமேடு, ஏ.டி.காலனி, 26வது வார்டில், தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை, மூன்று பேரை கடித்து விட்டது. குழந்தைகளும் பெரியவர்களும் வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர்.- தேவராஜ், பீளமேடு


புதர்மண்டிய சாலை


கோவை மாநகராட்சி 17வது வார்டு, சிக்கராயபுரம் பொன்நகர் பகுதியில் ரோட்டில் இருபுறமும் புதர் மண்டியுள்ளதால், பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சாலையை கடக்கவே அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?- சண்முகம், பொம்மணம்பாளையம்


ஆறாக ஓடும் கழிவுநீர்


மாநகராட்சி 49வது வார்டு, பாரதியார் ரோடு வடக்கு மண்டலம் அருகில், சாக்கடை கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. சமீபத்தில் மேயர் நேரில் பார்வையிட்டுச் சென்றார். ஆனாலும் எந்த பலனும் இல்லை.- முத்துக்குமார், கோவை

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X