கொலை முயற்சி வழக்கு; எஸ்.பி.,யிடம் ரவுடி சரண்

Added : செப் 20, 2022 | |
Advertisement
விழுப்புரம் : கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி, எஸ்.பி.,யிடம் சரணடைந்தார்.விக்கிரவாண்டி கே.கே., நகரைச் சேர்ந்தவர் புகழேந்தி, 33; இவர், கடந்த 3ம் தேதி அப்பகுதியில், மத்திய கூட்டுறவு வங்கி எதிரே உள்ள தள்ளு வண்டி கடையில் டிபன் சாப்பிட வந்துள்ளார்.அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கைப்பிள்ளை ராஜ் என்கிற வரதராஜ், 33; முன்விரோதம் காரணமாக ஜாதி பெயரைக்

விழுப்புரம் : கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி, எஸ்.பி.,யிடம் சரணடைந்தார்.

விக்கிரவாண்டி கே.கே., நகரைச் சேர்ந்தவர் புகழேந்தி, 33; இவர், கடந்த 3ம் தேதி அப்பகுதியில், மத்திய கூட்டுறவு வங்கி எதிரே உள்ள தள்ளு வண்டி கடையில் டிபன் சாப்பிட வந்துள்ளார்.அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கைப்பிள்ளை ராஜ் என்கிற வரதராஜ், 33; முன்விரோதம் காரணமாக ஜாதி பெயரைக் கூறி புகழேந்தியை கத்தியால் வெட்டினார்.

இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, வரதராஜை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்.பி., ஸ்ரீநாதாவிடம், வரதராஜ் சரணடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரை விக்கிரவாண்டி போலீசார் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X