காசிமேடில் மக்கள் திடீர் சாலை மறியல்

Added : செப் 20, 2022 | |
Advertisement
காசிமேடு ;புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெரு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை விரைந்து கட்டித் தரக்கோரி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.சென்னை புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்தனர்.30 ஆண்டுகளுக்கு முன்
காசிமேடில் மக்கள் திடீர் சாலை மறியல்

காசிமேடு ;புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெரு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை விரைந்து கட்டித் தரக்கோரி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.சென்னை புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்தனர்.30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த வீடுகள், பழுதடைந்து மிக மோசமான நிலையில் உள்ளன.

இதையடுத்து, 2019ல் புதிய வீடுகள் கட்ட முடிவெடுக்கப்பட்டு, சேதமான வீடுகள் இடிக்கப்பட்டன.இந்நிலையில், புதிய வீடுகள் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வந்தது. கொரோனா நோய் தொற்று, ஆட்சி மாற்றத்தால், பணி கிடப்பில் போடப்பட்டது. அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான மக்கள், காசிமேடு எஸ்.என்.செட்டி தெருவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த ராயபுரம் உதவி ஆணையர் லட்சுமணன், ஆர்.கே.நகர் - எம்.எல்.ஏ., எபினேசர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின், மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X