கர்நாடகாவில் 2 பயங்கரவாதிகள் கைது தலைமறைவான மற்றொருவருக்கு வலை

Added : செப் 20, 2022 | |
Advertisement
ஷிவமொகா:கர்நாடக மாநிலம், ஷிவமொகாவில் இரண்டு பயங்கரவாதிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஷிவமொகாவைச் சேர்ந்த பிரேம்சிங், 26, என்பவர் ஆகஸ்ட் 15ல், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, பத்ராவதி டி.எஸ்.பி., ஜிதேந்திரா விசாரித்தார். விசாரணையில்,
கர்நாடகாவில் 2 பயங்கரவாதிகள் கைது தலைமறைவான மற்றொருவருக்கு வலை

ஷிவமொகா:கர்நாடக மாநிலம், ஷிவமொகாவில் இரண்டு பயங்கரவாதிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஷிவமொகாவைச் சேர்ந்த பிரேம்சிங், 26, என்பவர் ஆகஸ்ட் 15ல், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, பத்ராவதி டி.எஸ்.பி., ஜிதேந்திரா விசாரித்தார். விசாரணையில், ஜபிவுல்லா, 24, என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது மொபைல் போனை பரிசோதனை செய்த போது, மூன்று பயங்கரவாதிகளுடன் அடிக்கடி தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

பயங்கரவாதிகள் அறிவுறுத்தலின்படியே பிரேம் சிங்கை கொலை செய்ததும் தெரிந்தது. இதையடுத்து, ஷிவமொகா சித்தேஸ்வர நகரைச் சேர்ந்த சையத் யாசின், 21, மங்களூரு மாஜ் முனீர், 21, தீர்த்தஹள்ளி சொப்பு கட்டே பகுதியை சேர்ந்த ஷாரிக், 21, ஆகிய மூவர் மீது, ஷிவமொகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சையத் யாசின், மாஜ் முனீர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இருவரையும் மங்களூரு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வரும் 29ம் தேதி வரை காவலில் எடுத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான மற்றொரு பயங்கரவாதி ஷாரிக்கை தேடி வருகின்றனர்.இது குறித்து, ஷிவமொகா எஸ்.பி., லட்சுமி பிரசாத் கூறியதாவது:கொலை வழக்கை விசாரித்த போது, பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து தேசிய புலனாய்வு படை, மத்திய உளவு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாகியுள்ள ஷாரிக், கைது செய்யப்பட்டுள்ள மாஜ் முனீர் இருவரும், 2020 நவம்பர் 27ம் தேதி, மங்களூரின் கத்ரியில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான வாசகங்களை எழுதியிருந்தனர்.இவ்வழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டு, 2021 செப்டம்பர் 8ல் ஜாமினில் வந்தனர். மாஜ் முனீர் எம்.டெக்., முதுகலை படிப்பும்; சையத் யாசின் பி.இ., எலக்டிரிக்கல் பொறியியல் படிப்பும் படித்துள்ளனர்.
'
ஷாரிக், மங்களூரில் துணி கடையில் பணியாற்றி வந்தார்.இவ்வாறு அவர் கூறினார்.இவர்கள் மூவரும், வெடிகுண்டுகள் மூலம் சில முக்கிய பகுதிகளை தகர்க்க சதி தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.கைதானவர்களுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது. அவர்களின் நடவடிக்கை குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

- அரக ஞானேந்திரா, உள்துறை அமைச்சர், கர்நாடகா.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X