சென்னை உட்பட 10 நகரங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள்

Added : செப் 20, 2022 | |
Advertisement
சென்னை:''சென்னை, டில்லி உட்பட, 10 நகரங்களில் பொது வசதி மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளன,'' என, மத்திய கல்விமற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில், தோல் தொழில் திறன் கவுன்சில் தயாரித்த 'ஸ்கேல்' எனும், தோல் தொழிலாளர்களின் திறன்களை மதிப்பீடு செய்து சான்றிதழ்
சென்னை உட்பட 10 நகரங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள்

சென்னை:''சென்னை, டில்லி உட்பட, 10 நகரங்களில் பொது வசதி மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளன,'' என, மத்திய கல்விமற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில், தோல் தொழில் திறன் கவுன்சில் தயாரித்த 'ஸ்கேல்' எனும், தோல் தொழிலாளர்களின் திறன்களை மதிப்பீடு செய்து சான்றிதழ் வழங்கும்செயலி அறிமுக விழா நேற்று நடந்தது.செயலியை அறிமுகம் செய்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:தோல் தொழில் துறையில் வடிவமைத்தல், தயாரித்தல் சந்தைப்படுத்துதல் போன்ற பல்வேறு செயல்கள், 'டிஜிட்டல்' வடிவில் மாற்றப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கேற்ப தொழிலாளர்களின் திறனை மேம்படுத்த வேண்டும்.தற்போது, 42 லட்சம் தொழிலாளர்கள் தோல் துறையில் உள்ளனர். இந்த எண்ணிக்கையை, 60 லட்சமாக உயர்த்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக சென்னை, டில்லி, மும்பை, ஆக்ரா உட்பட, 10 நகரங்களில் பொது வசதி மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

மேலும், வேலை தேடுவோராக இல்லாமல், வேலை உருவாக்குவோராக அவர்களை மாற்ற முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் முருகன் பேசியதாவது:இந்தியாவின் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், பல்வேறு நாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. பொருளாதார வளர்ச்சி முன்னேற்றத்திற்கு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் செயல்பாடுகள் தான் காரணம்.வரும் 2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும்;.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் ஸ்ரீராம், ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் ஹபிப் ஹூசைன், தோல் துறை திறன் கவுன்சில் தலைவர் அகீல் அகமது உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X