இலவச பேஷன் டிசைனர் பயிற்சி:கிராமப்புற இளைஞரே தயாரா...!

Added : செப் 20, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்---டீ ஆயத்த ஆடை வடிவமைப்பு கல்லுாரியில், தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில் ஆடை தயாரிப்பு சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 1,250 பேருக்கு பயிற்சி அளிக்க இக்கல்லுாரிக்கு அரசு அனுமதி வழங்கியது.கடந்த, 2019 முதல் இதுவரை, 1,050 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கிராமப்புற

திருப்பூர்:திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்---டீ ஆயத்த ஆடை வடிவமைப்பு கல்லுாரியில், தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில் ஆடை தயாரிப்பு சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 1,250 பேருக்கு பயிற்சி அளிக்க இக்கல்லுாரிக்கு அரசு அனுமதி வழங்கியது.கடந்த, 2019 முதல் இதுவரை, 1,050 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு, தையல், அப்பேரல் பேஷன் டிசைன் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்தவுடன் மத்திய அரசு சான்றிதழ் வழங்குவதோடு, ஆடை உற்பத்தி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது.தற்போது, 150 பேருக்கு பயிற்சி அளிக்க நிப்ட்--டீ கல்லுாரியின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் முடிவு செய்துள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பிளஸ் 2 மற்றும் அதற்குமேல் படித்த கிராமப்புற இளைஞர்கள், பயிற்சியில் இணையலாம். பயிற்சியில் இணைய விரும்புவோர், 80563 23111, 80566 91111 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம், என கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X