முழு தேங்காயை கொள்முதல் செய்ய எதிர்பார்ப்பு கேரளாவை பின்பற்றுமா தமிழகம்?

Added : செப் 20, 2022 | |
Advertisement
திருப்பூர்:கேரளாவில் அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், கூட்டுறவு சங்கத்தினர் முழு தேங்காயை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தென்னை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.கோவை, திருப்பூர் மாவட்ட பகுதிகளில், பாசன வசதி குறைந்த பகுதிகளில், பயிர் சாகுபடி செய்வதை குறைத்து கொண்டனர். அதற்காக, நீண்டகால பயிரான தென்னை சாகுபடிக்கு மாறினர். கடந்த, 20

திருப்பூர்:கேரளாவில் அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், கூட்டுறவு சங்கத்தினர் முழு தேங்காயை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தென்னை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.கோவை, திருப்பூர் மாவட்ட பகுதிகளில், பாசன வசதி குறைந்த பகுதிகளில், பயிர் சாகுபடி செய்வதை குறைத்து கொண்டனர். அதற்காக, நீண்டகால பயிரான தென்னை சாகுபடிக்கு மாறினர். கடந்த, 20 ஆண்டுகளாக, திருப்பூர் மாவட்ட எல்லையில், தென்னந்தோப்பின் பரப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த காலங்களை காட்டிலும் தேங்காய்விலை உயர்ந்து இருந்தாலும் கூட, நியாயமான விலை இல்லை. தென்னை விவசாயிகள் பயன்பெற வேண்டுமெனில், ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், கேரளாவில், தொழிலாளர் பற்றாக்குறை காரணமாகவும், உற்பத்தி செலவு அதிகரிப்பதாலும், மட்டையுடன் தேங்காயை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. அதனை அறிந்த விவசாயிகள், வாய்ப்பு வசதி இருந்தால், தமிழகத்திலும் உரிக்காத தேங்காயை, அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'தேங்காய் மட்டை உரித்து, உலர்களத்தில் காயவைத்து, கொப்பரையாக மாற்றி, விற்பனை செய்வதில் சிரமம் உள்ளது. கேரளாவை போலவே, முழு தேங்காயை அரசே நேரடியாக கொள்முதல் செய்து, கொப்பரையாக மாற்ற திட்டமிடலாம்,' என்றனர்.திருப்பூர் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு அதிகாரிகள் கூறியதாவது:கேரளாவில், விவசாயிகளிடம் நேரடியாக தேங்காயை கொள்முதல் செய்து, கொப்பரையாக மாற்றி, கூட்டுறவுத்துறை மூலம், 'நாபெட்' நிறுவனத்துக்கு விற்க முடிவு செய்துள்ளனர். கேரள அரசு உத்தரவுப்படி, கொப்பரையை, கிலோ 105.90 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும்.தேங்காயில் இருந்து, கொப்பரையாக மாற்றுவதற்கு, கூடுதலாக, கிலோவுக்கு, 3.40 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். அதேபோல், தமிழகத்திலும் கொப்பரை கொள்முதல் நிலையங்களில், மட்டையுடன் கூடிய தேங்காயை, கொப்பரையாக மாற்றி கொள்முதல் செய்ய, அரசுக்கு அனுமதி கோரி கருத்துரு அனுப்பியுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X