ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : செப் 20, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு:தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, மாவட்ட செயலர் ஜோசப் தலைமையில், செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலம் முன் ஆர்ப்பாட்டம், நடந்ததுஇந்த ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும். ஒரே நாடு, ஒரே கொள்கை என்ற, ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு:தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, மாவட்ட செயலர் ஜோசப் தலைமையில், செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலம் முன் ஆர்ப்பாட்டம், நடந்தது
இந்த ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும். ஒரே நாடு, ஒரே கொள்கை என்ற, ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பதவிகளை மீண்டும் உருவாக்கி, தொடக்கக் கல்வி இயக்குனரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.
வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களாக மீண்டும் அறிவிக்கப்பட்டு, தேர்வுநிலை, சிறப்புநிலை, உயர்கல்வி அனுமதி ஆகியவற்றை அனுமதிக்கும் அதிகாரங்களை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நடந்தன. இதில், 250 பெண் ஆசிரியர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X