மனைவியை வெட்டிய கணவர் கைது| Dinamalar

மனைவியை வெட்டிய கணவர் கைது

Added : செப் 20, 2022 | |
வியாசர்பாடி:வியாசர்பாடியில், மனைவியை சரமாரியாக கத்தியால் வெட்டிய கணவரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.சென்னை புளியந்தோப்பு, சுந்தரபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் பிரசாத், 26; ஆட்டோ டிரைவர்.இவர் கொருக்குப்பேட்டை, ஏகப்பன் தெருவைச் சேர்ந்த தமிழ்செல்வி, 18, என்பவரை காதலித்து வந்தார்.பெற்றோர் சம்மதத்துடன், இருவரும் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து,
மனைவியை  வெட்டிய கணவர் கைது

வியாசர்பாடி:வியாசர்பாடியில், மனைவியை சரமாரியாக கத்தியால் வெட்டிய கணவரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

சென்னை புளியந்தோப்பு, சுந்தரபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் பிரசாத், 26; ஆட்டோ டிரைவர்.இவர் கொருக்குப்பேட்டை, ஏகப்பன் தெருவைச் சேர்ந்த தமிழ்செல்வி, 18, என்பவரை காதலித்து வந்தார்.பெற்றோர் சம்மதத்துடன், இருவரும் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து, வியாசர்பாடி, எம்.எம்.கார்டன் பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தினர்.


குடிப் பழக்கத்திற்கு அடிமையான பிரசாத், அடிக்கடி குடித்துவிட்டு வந்து, தமிழ்செல்வியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பிரசாத், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.அப்போது, இருவருக்கும் வாய்த் தகராறு முற்றியது.


இதில் ஆத்திரமடைந்த பிரசாத், கத்தியால் தலை, இடுப்பு, முதுகு உள்ளிட்ட இடங்களில் தமிழ்செல்வியை சரமாரியாக வெட்டினார்.இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த தமிழ்செல்வியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்து, வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.


போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், பிரசாத் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X