ராகுல் குறித்து அவதூறு பதிவு:காங்., கட்சியினர் புகார் மனு| Dinamalar

ராகுல் குறித்து அவதூறு பதிவு:காங்., கட்சியினர் புகார் மனு

Added : செப் 20, 2022 | |
திருப்பூர்:ராகுல் குறித்து அவதுாறு கருத்து பதிவு செய்த பா.ஜ., வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காங்., கட்சியினர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.திருப்பூர் மாநகர மாவட்ட இளைஞர் காங்., பொது செயலாளர் சந்தீப் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:தமிழக பா.ஜ., தகவல் தொழில்நுட்ப துறை மாநில தலைவர் நிர்மல்குமார், கரூர்

திருப்பூர்:ராகுல் குறித்து அவதுாறு கருத்து பதிவு செய்த பா.ஜ., வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காங்., கட்சியினர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.திருப்பூர் மாநகர மாவட்ட இளைஞர் காங்., பொது செயலாளர் சந்தீப் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:தமிழக பா.ஜ., தகவல் தொழில்நுட்ப துறை மாநில தலைவர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட பா.ஜ., தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவின் மாவட்ட துணை தலைவராக உள்ள செந்தில்குமார் ஆகியோர், எம்.பி., ராகுல் சகோதரி மகளுடன், தனிப்பட்ட குடும்ப நிகழ்வில் பங்கேற்ற போட்டோவை இணைத்து, புகழுக்கு களங்கம் ஏற்படும் வகையில் பகிர்ந்துள்ளனர். சிறுமி என்று கூட பாராமல் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தி கொச்சை வசனங்களையும், பாடல்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு பகிர்ந்து வருகிறார்.இதனால், தொண்டர்கள் மிகுந்த மன வேதனையும், துயரமும் அடைந்துள்ளோம். எனவே, எம்.பி., ராகுல் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பதிவிட்டுள்ள பா.ஜ., வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X