கல்விக் கடன் ரத்து வாக்குறுதியை நம்பி தொழில் வாய்ப்பினை இழக்கும் இளைஞர்கள்!

Updated : செப் 21, 2022 | Added : செப் 21, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் - திமுக அளித்த இந்த வாக்குறுதியை கேட்டு, வேலைவாய்ப்பு இல்லாத ஏராளமான ஏழை இளைஞர்கள் ஸ்டாலினை சமூக ஊடகங்களில் புகழ்ந்தார்கள். இந்த வாக்குறுதியை நம்பி அவர்கள் திமுகவிற்கு வாக்களித்திருக்கவும் கூடும். ஆனால் ஓராண்டை கடந்த பின்னரும் கல்விக் கடன் ரத்து பற்றிய எந்த செய்தியும் காணோம்.
Education_loan, கல்விக்கடன், Cibil_Score, தேர்தல்வாக்குறுதி

30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் - திமுக அளித்த இந்த வாக்குறுதியை கேட்டு, வேலைவாய்ப்பு இல்லாத ஏராளமான ஏழை இளைஞர்கள் ஸ்டாலினை சமூக ஊடகங்களில் புகழ்ந்தார்கள். இந்த வாக்குறுதியை நம்பி அவர்கள் திமுகவிற்கு வாக்களித்திருக்கவும் கூடும்.

ஆனால் ஓராண்டை கடந்த பின்னரும் கல்விக் கடன் ரத்து பற்றிய எந்த செய்தியும் காணோம். இந்த வாக்குறுதியை நம்பியிருந்தவர்களின் சிபில் ஸ்கோர் கடுமையாக பாதிக்கப்பட்டு தொழிற்கடன், வாகனக் கடன், கிரெடிட் கார்டு போன்ற எந்த வங்கி சேவைகளையும் பெற முடியாமல் கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கடந்த 2021 தமிழக பொதுத் தேர்தலுக்கு முன்பாக திமுக ஏராளமான கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பதும் ஒன்று. இந்த வாக்குறுதி 2016 சட்டமன்ற பொதுத் தேர்தல், 2019 பாராளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களின் போதும் வாக்குறுதியாக திமுக., அறிவித்தது. மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வங்கிகளில் பெற்ற கடன் தொகையை எப்படி மாநில அரசு ரத்து செய்ய முடியும் என்ற கேள்வியை அதிமுகவினர் எழுப்பினர். மாணவர்களின் நிலுவை கடன் மதிப்பிற்கான தொகையை மாநில அரசு செலுத்தி கடன் ரத்து அறிவிப்பை நிறைவேற்றும் என்றனர்.latest tamil news
திமுக., ஆட்சிக்கு வந்து தற்போது ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. தேர்தல் வாக்குறுதிகளில் 70 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றப்பட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால் ஏராளமான இளைஞர்களுக்கு நேரடி பலன் வழங்கக் கூடிய கல்விக் கடன் ரத்து வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எப்போது நிறைவேற்றப்படும், எப்படி நிறைவேற்றப்படும் என்ற தகவலும் இல்லை. இதனால் ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் புரியாமல் குழம்பித் தவிக்கின்றனர். குறிப்பாக இந்த வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தால், உள்ளூரில் ஏதாவது தொழில் நடத்தி செட்டில் ஆகலாம் என்று நினைக்கும் ஊரகப் பகுதி இளைஞர்களின் தொழில் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.


மோசமடைந்துள்ள சிபில் ஸ்கோர்!latest tamil news
கல்விக் கடன் ரத்து செய்யப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் வாங்கிய கடனை பலரும் கட்டவில்லை. கல்விக் கடன் தொடர்பாக அழுத்தம் தரக்கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவால் வங்கிகளாலும் இதனை வசூல் செய்ய முடியவில்லை. ஆனால் கடனாளியின் நம்பகத்தன்மையை அறிய உதவும் சிபில் ஸ்கோரில் இது எதிரொலிக்கிறது. கல்விக் கடன் தவனையை செலுத்தாதவர்களுக்கு இந்த ஸ்கோர் 300, 400 என்கிற மோசம் என்கிற அளவில் வந்துள்ளது.


ஏன் சிபில் ஸ்கோர் முக்கியம்?எந்த வகையான கடன் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனம் அந்த நபரின் கடன் தகுதியினை காட்டும் சிபில் ஸ்கோரையே முதலில் ஆராயும். சிபில் ஸ்கோர் 740க்கு மேல் இருந்தால் கடன் வாங்குபவர் கடனைத் தாமதமின்றி சரியான நேரத்தில் செலுத்தக் கூடியவர் என்றறிவர். இதன் மூலம் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு.


latest tamil news


மோசமான சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கு வாகனக் கடன், தொழில் கடன், வீட்டுக் கடன், விவசாயக் கடன் போன்ற எந்தக் கடனும் கொடுக்கப்படுவதில்லை. வெளியில் அதிக வட்டிக்கு தான் வாங்குவர். அதனை அடைக்க படாத பாடு பட வேண்டியிருக்கும். தற்போது இந்த நிலையை தான் கல்விக் கடன் பெற்ற பலரும் சந்திக்கின்றனர். ரத்து அல்லது ரத்து இல்லை என்று அறிவித்தால் இனியாவது சிறுக சிறுக கடனை அடைத்து எதிர்காலத் தேவைக்கு கந்து வட்டியை நாடிச் செல்லாமல், வங்கியிடம் கடன் பெற முடியும் என்பது இளைஞர்கள் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதே சமயம் 2024 பாராளுமன்றத் தேர்தலில் எங்களின் கோபத்திற்கு தி.மு.க., ஆளாகக் கூடும் என்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-செப்-202211:22:15 IST Report Abuse
Lion Drsekar ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்பார்கள் அதுபோல். எல்லாமே தள்ளுபடி என்றால்? சுய தொழில் செய்பவர்களால்தான் உலகமே இயங்குகிறது. அப்படி இருக்க அவர்களை குற்றவாளிபோல் சித்தரித்து, இலவசங்களை அனுபவிக்கும் ஏழைகளிடம் வரிகட்டுபவர்களை இவர்கள்தான் உங்கள் தெய்வம் இவர்கள் இல்லையென்றால் அரசாங்கமே இல்லை என்று கூறுவதற்கு பதிலாக சமூக விரோதிகளைப்போல் தவறான பிரச்சாரங்களை செய்துவரும் நிலை மாறவேண்டும், மாறாக வரிகட்டுபவர்களளுக்கு மரியாதை அளிக்கும் வகையில் செலயப்படவேண்டும், அதே போன்று இலவச திட்டங்களில் அரசியக்கட்சிகளின் பெயர்களுக்கு பதிலாக உங்களுக்கு இதை வழங்கிய பணக்காரர்களுக்கும் வரி கட்டுபவர்களுக்கும் நன்றி என்று கூறும் வாசகம் இடம்பெறவேண்டும், காரணம் இலவசங்களை அனுபவிப்பவர்கள் ஏதோ அவர்களுக்கு அரசியல் காட்சிகள்தான் எல்லாமே கொடுக்கிறது என்று நினைத்து காரில் செல்பவர்களை தேச துரோகிகளாக பார்ப்பதும், செயல்படுவதும் அதிகரித்து வருகிறது, பல இடங்களில் வரிகட்டுபவர்கள் எல்லா நிலைகளிலும் பல இன்னல்களுக்கு ஆளாகிக்கொண்டு வருகின்றனர் அப்படி இருக்க இந்த இலவசமாகட்டும், அரசு ஊழியர்களின் சம்பளமாக இருக்கட்டும், அரசாங்கமாக இருக்கட்டுமே எல்லாவற்றுக்குமே சுய தொழில் செய்பவர்கள் மற்றும் வரிகட்டுபர்களால் மட்டுமே என்பதை எல்லா இடங்களிலும் உறுதி செய்யவேண்டும், அதே நேரத்தில் வரிகட்டுபவர்களுக்கு மரியாதை தரம் வகையில் ஜாதி, மத அடிப்படையில் அரசு அலுவல்களில் வைக்கப்பட்டிருக்கும் பதாகைகளை பக்கத்தில், நாம் சம்பளம் பெறுவது வரிகட்டுபவர்களால் ஆகவே அவர்கள்தான் நமக்கு தெய்வம் என்ற வாசகம் இடம்பெறும் வகையில் திருத்தும் செய்யவேண்டும், பல கோடி கடன் வழங்குகிறார்கள் அதையும் தள்ளுபடி செய்வது அரசு?? இவைகளும் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும், ஏழை மட்டும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்துக்கு வரிகட்டுபவர்கள் தான் என்பதை உறுதிசெய்யும் வகையில் எல்லா இடங்களிலும் நிலைநிறுத்தப்படவேண்டும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
samvijayv - Chennai,இந்தியா
21-செப்-202211:20:04 IST Report Abuse
samvijayv இனியாவது புத்தி வருமா?., 'திராவிடனுக்கு.
Rate this:
Cancel
21-செப்-202209:33:26 IST Report Abuse
Krishna Moorthy திமுகவிற்கு பொய்களை நம்பி ஓட்டு போட்ட அனைவரும் செய்ய வேண்டியது இதுதான். 1. 200 ஓவா, குவாட்டர், பிரியாணிக்கு அடிமையாகி இப்படி இனி மானம் கெட்டு தெருவில் நிற்க மாட்டோம் என குடும்பத்தோடு சத்திய பிரமாணம் எடுக்க வேண்டும் சுய நினைவோடு. 2. தைரியம் இருந்தால் ஓவா வாங்கிய அனைவரும் ஒற்றுமையுடன் அமைச்சர்களை கேள்வி கேட்கவேண்டும். 3. இல்லையெனில் நவ துவாரங்களையும் மூடிக்கொண்டு தங்கள் வேலையை பார்க்க வேண்டும். 4. இனிமேலாவது பசப்பு வார்த்தைக்கும், பொய் வாக்குறுதிக்கும் நம்பி மோசம் போகாமல் நல்ல தலைவரை (திராவிட கட்சிகளை, மற்றும் அவர்கள் கூட்டணி கட்சிகளை தவிர்த்து) தேர்வு செய்யுங்கள். இனியாவது புத்தி வருமா? பார்க்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X