151 இடங்களில் பிரசார கூட்டம்: ஆசிரியர் கூட்டணி தகவல்

Added : செப் 21, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கடலுார் : 'தொடக்கக் கல்வித் துறை தனியாக இயங்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையை வரவேற்று 151 பிரசார கூட்டங்கள் நடத்தப்படும்' என, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் தாஸ் கூறினார்.தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கடலுாரில் நடந்தது. மாவட்டத் தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன், மகளிரணி
151 இடங்களில் பிரசார கூட்டம்: ஆசிரியர் கூட்டணி தகவல்


கடலுார் : 'தொடக்கக் கல்வித் துறை தனியாக இயங்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையை வரவேற்று 151 பிரசார கூட்டங்கள் நடத்தப்படும்' என, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் தாஸ் கூறினார்.தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கடலுாரில் நடந்தது.

மாவட்டத் தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன், மகளிரணி மாவட்ட செயலாளர்கள் செல்வி, அமுதா முன்னிலை வகித்தனர்.பொருளாளர் பாலா வரவேற்றார். மாநிலத் தலைவர் லட்சுமிபதி, மாநில பொதுச் செயலாளர் தாஸ் பேசினர். வட்டார செயலாளர் துளசிதாஸ் நன்றி கூறினார்.கூட்டத்தை தொடர்ந்து, ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் தாஸ் அளித்த பேட்டி:அரசு ஊழியர், ஆசிரியர் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ மாநாடு சென்னையில் நடந்தது. மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், அரசாணை எண் 101யை ரத்து செய்து, தொடக்கக் கல்வித் துறை தனியாக இயங்கும் வகையில் அரசாணை எண் 151யை வெளியிட்டார்.

இது, தொடக்கக் கல்வித்துறையை சுதந்திரமாக செயல்பட வழி வகுக்கிறது. இதனை வரவேற்று மாநிலம் முழுதும் 151 இடங்களில் பிரசார கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த கூட்டங்களில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.இடை நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்படும்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajarajan - Thanjavur,இந்தியா
21-செப்-202209:40:27 IST Report Abuse
Rajarajan அரசு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள், சம்பளம் போதவில்லை, சலுகை போதவில்லை என்று போராட்டம் நடத்தி, அரசு பள்ளி மாணவருக்கு இடையூறு செய்தால், இவர்கள் வாரிசுகள் படிக்கும் தனியார் பள்ளிகளுக்கு, இவர்கள் வாரிசுகளை செல்ல விடாமல் தடுத்து, அதை வாட்ஸாப்பில் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தால் போதும். போராட்டம் தானே அடங்கும். நடத்திவிட்டு பின்னர் சொல்லுங்கள். தலைவலி கஷ்டம் தனக்கு வந்தால் தான் தெரியும் .
Rate this:
Cancel
21-செப்-202209:17:00 IST Report Abuse
N SASIKUMAR YADHAV தமிழகத்திலிருந்து தீயமுக ஆயிஅதிமுக ஆட்சிகளை அகற்றாதவரை இவனுங்க தொல்லைகள் இருந்து கொண்டிருக்கும்
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
21-செப்-202208:16:47 IST Report Abuse
சீனி யாரு பெத்த பிள்ளைகளோ இவர்களிடம் படித்து, கடைசியில் டாஸ்மாக் செல்ல தயாராகி வருகின்றனர். எத்தனை லட்சம் சம்பளம் வாங்கி ஊர் பூரா சீட்டு நடத்தி, வட்டிக்கு விட்டிருந்தாலும், மேலும் மேலும் கேட்டு சாகும்வரை சம்பளத்துக்கும், பென்சனுக்கும் போராடுவோம் - இப்படிக்கு ஜாக்டோ ஆசிரியர்கள் கூட்டணி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X