பக்தி என்ற நெருப்பு, பாவத்தை எரிக்கும்! வேளுக்குடி கிருஷ்ணன் விளக்கம்| Dinamalar

பக்தி என்ற நெருப்பு, பாவத்தை எரிக்கும்! வேளுக்குடி கிருஷ்ணன் விளக்கம்

Added : செப் 21, 2022 | |
திருப்பூர்:''பக்தி என்ற நெருப்பு வளர, வளர, பாவம் அனைத்தும் தீயில் எரிந்து போகும்,'' என்று திருப்பூரில், வேளுக்குடி கிருஷ்ணன் பேசினார்.திருப்பூர் காயத்ரி மஹாலில், தொடர் உபன்யாச நிகழ்ச்சி நடந்து வருகிறது. நான்காவது நாளான நேற்று அவர் பேசியதாவது:யார் ஒருவருக்கு துன்பம், இன்பம் வந்தாலும், முதலில் பெருமாளை அழையுங்கள். உங்கள் அனைத்திலும் அவர் இருப்பார். பக்தி என்கிற
பக்தி என்ற நெருப்பு, பாவத்தை எரிக்கும்! வேளுக்குடி கிருஷ்ணன் விளக்கம்

திருப்பூர்:''பக்தி என்ற நெருப்பு வளர, வளர, பாவம் அனைத்தும் தீயில் எரிந்து போகும்,'' என்று திருப்பூரில், வேளுக்குடி கிருஷ்ணன் பேசினார்.திருப்பூர் காயத்ரி மஹாலில், தொடர் உபன்யாச நிகழ்ச்சி நடந்து வருகிறது. நான்காவது நாளான நேற்று அவர் பேசியதாவது:யார் ஒருவருக்கு துன்பம், இன்பம் வந்தாலும், முதலில் பெருமாளை அழையுங்கள். உங்கள் அனைத்திலும் அவர் இருப்பார். பக்தி என்கிற நெருப்பு வளர, வளர, நாம் செய்த பாவம் அனைத்தும், தீயில் எரிந்து விடும். பக்திக்கு முன், பின் என உள்ளது. பக்திக்கு முன்னால், தெரியாமல் பாவம் செய்திருப்போம்.ஆனால், பக்திக்கு பின் தெரிந்து, ஒரு பாவத்தையும் செய்ய கூடாது. தெரிந்தே பாவத்தை செய்யக்கூடாது. பக்தி ஒன்றால் தான் முக்தி அடைய முடியும். பெருமாளை பற்றி தெரியத்தெரிய பக்தியுடன் சரணடைவோம்.கஷ்டமானதை சொல்லி சொல்லி புரிய வைத்து விட்டால், எளிமையான வழி தெரிந்து விடும். பெருமாளை பற்றி தெரிந்து கொண்டால் தான், பக்தி ஊற்று எடுக்கும். ஞானத்தில், அன்பு, சினேகம் கலக்க, கலக்க பக்தியாக மாறுகிறது. பக்தி நிச்சயம் இருக்க வேண்டும், காத்திருப்பு வேண்டும்.உயிரை விடும் தருவாயில், எதை நினைத்து இறக்கிறானோ, அதுவாக, அடுத்த பிறவியில் வருவான். அப்படி நினைக்கும் போது, அவரை சரணடைவைதோடு, முக்தியும் கிடைக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X