தென் மண்டலத்தில் நடக்கிறது ராணுவ தின அணிவகுப்பு?

Updated : செப் 21, 2022 | Added : செப் 21, 2022 | |
Advertisement
புதுடில்லி, :வழக்கமாக புதுடில்லியில் நடக்கும் ராணுவ தினஅணிவகுப்பை, வரும் 2023ல் ராணுவத்தின் தென் மண்டலத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடு சுதந்திரம் அடைந்த பின், 1949 ஜன., 15ல், பிரிட்டிஷாரிடம் இருந்த ராணுவத் தலைமை பொறுப்பு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்படி, பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா, நாட்டின் முதல் ராணுவ தலைமை தளபதியாக
தென் மண்டலத்தில் நடக்கிறது  ராணுவ தின அணிவகுப்பு?

புதுடில்லி, :வழக்கமாக புதுடில்லியில் நடக்கும் ராணுவ தினஅணிவகுப்பை, வரும் 2023ல் ராணுவத்தின் தென் மண்டலத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடு சுதந்திரம் அடைந்த பின், 1949 ஜன., 15ல், பிரிட்டிஷாரிடம் இருந்த ராணுவத் தலைமை பொறுப்பு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்படி, பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா, நாட்டின் முதல் ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்றார்.


latest tamil news



இந்த நாள், ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்துக்குப் பின், ராணுவ தினத்தில் நடக்கும் அணிவகுப்பு மிகவும் பிரபலமாகும்.வழக்கமாக இந்த ராணுவ தின அணிவகுப்பு புதுடில்லியில் நடக்கும். வரும் 2023ல் இருந்து, சுழற்சி முறையில் ராணுவத்தின் பல்வேறு மண்டலங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதன்படி, 2023 ஜன., 15ல் ராணுவ தின அணிவகுப்பு, ராணுவத்தின் தென் மண்டலத்தில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

ராணுவத்தின் தென் மண்டலம், 1895 ஏப்., 1ல் மஹாராஷ்டிர மாநிலம் புனேயை தலைமையிடமாக வைத்து உருவாக்கப்பட்டது. இதன் கீழ், ஜோத்பூர் மற்றும் போபாலை தலைமையிடமாக வைத்து இரண்டு படைப் பிரிவுகள் உள்ளன.

தென் மண்டலத்தின் கீழ், 11 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்கள் வருகின்றன. இதன் கீழ், 19 கன்டோன்மென்ட் பகுதிகளும், 36 ராணுவ முகாம்களும் உள்ளன.முன்னதாக அக்., 8ம் தேதியில் கொண்டாடப்படும் விமானப் படை தின அணிவகுப்பு, இந்தாண்டில் சண்டிகரில் உள்ள விமானப் படை தளத்தில் நடத்தப்படும் என்று
அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X