நடுநிலையான செய்திகளை வெளியிடஅமைச்சர் அனுராக் தாக்குர் வலியுறுத்தல்

Added : செப் 21, 2022 | |
Advertisement
புதுடில்லி, :''நடுநிலையான செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் உறுதி செய்ய வேண்டும். அனைத்து தரப்பினரின் கருத்துகளுக்கும் இடமளிக்க வேண்டும்,'' என, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் பேசினார்.ஏ.ஐ.பி.டி., எனப்படும், தகவல் ஒளிபரப்பு மேம்பாட்டுக்கான ஆசிய - பசிபிக் பயிற்சி மையத்தின் ஆண்டு கூட்டம் புதுடில்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தை துவக்கி வைத்து, மத்திய தகவல்

புதுடில்லி, :''நடுநிலையான செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் உறுதி செய்ய வேண்டும். அனைத்து தரப்பினரின் கருத்துகளுக்கும் இடமளிக்க வேண்டும்,'' என, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் பேசினார்.ஏ.ஐ.பி.டி., எனப்படும், தகவல் ஒளிபரப்பு மேம்பாட்டுக்கான ஆசிய - பசிபிக் பயிற்சி மையத்தின் ஆண்டு கூட்டம் புதுடில்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தை துவக்கி வைத்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அனுராக் சிங் தாக்குர் பேசியதாவது:ஊடக நெறிமுறைகள் மற்றும் அதன் மதிப்புகளை பாதுகாத்து, உண்மையான, நம்பகத் தன்மை வாய்ந்த, துல்லியமான தகவல்களை வெளியிடுவதில் பிரதான ஊடகங்கள் பெரும் சவாலை எதிர்கொள்கின்றன.

பிரதான ஊடகங்களுக்கான சவால், டிஜிட்டல் ஊடகங்கள் அல்ல; பிரதான ஊடகங்களின் நடவடிக்கைகளே சவாலாக உள்ளன.நடுநிலையான தகவல்களை மக்களுக்கு தெரிவிப்பதும், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் பதிவு செய்வதுமே உண்மையான பத்திரிகை பணி. 'டிவி' சேனல்கள் விவாதங்களை நடத்தும்போது, கட்டுக்கதைகளை பரப்புவோரையும், காட்டுத் தனமாக கூச்சலிடுவோரையும் விருந்தினர்களாக அழைத்தால், அவற்றின் நம்பகத்தன்மை குறைந்து விடும்.செய்திகளை பார்ப்பதில்இருந்து இளம் பார்வையாளர்களை விலகி ஓட வைக்கப் போகிறீர்களா அல்லது நடுநிலைமையுடன் செய்திகளை வெளியிட்டு, விவாதங்களை நடத்தி, அவர்களை செய்திகளை பார்க்க வைக்கப் போகிறீர்களா என்பது தான் முக்கியம்.

பொய்யான தகவல்களை பிரசாரம் செய்பவர்களுடன் போட்டி போட வேண்டிய கட்டாயம் இருந்தாலும், உண்மையான, நடுநிலையான செய்திகளை வெளியிடும் கடமை பத்திரிகையாளர்களுக்கு உள்ளது எனநம்புகிறேன். கடும் போட்டி நிறைந்த இந்த துறையில் நம் மதிப்பீடுகளை சமரசம் செய்யாமல், இந்த தொழிலை பாதுகாக்க கடுமையாக உழைக்க வேண்டும். ஏ.ஐ.பி.டி., அமைப்பு, பத்திரிகையாளர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து, அவர்களை திறமையானவர்களாக உருவாக்க வேண்டும். இதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில், 2021 - 22 ஆண்டுகளில் ஊடகத் துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன், அந்த துறையின் செயலர் அபூர்வா சந்திரா, ஏ.ஐ.பி.டி., இயக்குனர்பிலோமினா ஞான பிரகாசம் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X