சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது4 தொழிலாளர்கள் பலி

Added : செப் 21, 2022 | |
Advertisement
நொய்டா, :உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் குடியிருப்பு வளாகத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததால், அதன் அருகே வேலை பார்த்த நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்; மேலும், எட்டு பேர் படுகாயம் அடைந்தனர்.உ.பி.,யின் நொய்டா பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்திற்கு வெளியே, கழிவு நீர் வெளியேறும் கால்வாயை சீரமைக்கும் பணியில் நேற்று 12 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது குடியிருப்பு வளாகத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. 12 தொழிலாளர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். தீயணைப்பு படையினர் உடனடியாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.நீண்ட நேர போராட்டத்துக்குப் பின், எட்டு தொழிலாளர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்; நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:சுற்றுச்சுவர் மிகவும் பலவீனமாக இருந்ததால் இடிந்து விழுந்துள்ளது. இது குறித்து விசாரித்து வருகிறோம். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X