இறந்தும் உயிர் வாழ்கிறார் இளைஞர்உடல் உறுப்புகள் தானமாக வழங்கல்

Added : செப் 21, 2022 | |
Advertisement
உடுமலை:சாலை விபத்தில் படுகாயமடைந்து, மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.திருப்பூர் மாவட்டம், நம்பியாம்பாளையம் கிராமம், எம்.நாதம்பளையத்தில் வசிப்பவர்கள் ராஜேந்திரன் - ருக்மணி தம்பதி; இவர்களது மகன் நவீன் (எ) நடராஜ், 26. ஆட்டையம்பாளையத்தில் உள்ள ஒர்க் ஷாப்பில், மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.கடந்த,16ம் தேதி எம்.நாதம்பாளையம்

உடுமலை:சாலை விபத்தில் படுகாயமடைந்து, மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.திருப்பூர் மாவட்டம், நம்பியாம்பாளையம் கிராமம், எம்.நாதம்பளையத்தில் வசிப்பவர்கள் ராஜேந்திரன் - ருக்மணி தம்பதி; இவர்களது மகன் நவீன் (எ) நடராஜ், 26. ஆட்டையம்பாளையத்தில் உள்ள ஒர்க் ஷாப்பில், மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.கடந்த,16ம் தேதி எம்.நாதம்பாளையம் ஆட்டையம்பாளையம் இடைப்பட்ட சாலையில் டூவீலரில் வந்த போது நடந்த சாலை விபத்தில் தலையில் படுகாயமடைந்தார். திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இருப்பினும், அவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து, அவரது குடும்பத்தினர், தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.அதன்படி, அவரது இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவற்றை, கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். இதன் வாயிலாக, இறந்த பின்னும், பிறரது உயிரை வாழவைத்துள்ளார், இந்த இளைஞர்.உடல் உறுப்புகளை தானம் செய்ய தேவையான விழிப்புணர்வை, தமிழக அரசும், சுகாதாரத்துறையும் பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X