அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு: அழிக்கப்படும் மரங்கள்

Added : செப் 21, 2022 | |
Advertisement
பந்தலுார்:பந்தலுார் முக்கட்டி பகுதியில், யானை வழித்தடங்களில் சோலார் மின் வேலி அமைத்து, விவசாயம் மற்றும் கட்டுமான பணிகள் நடந்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.பந்தலுார் அருகே முக்கட்டி பகுதியில் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி, மூன்று 'சர்வே' எண்களில், 100 ஏக்கருக்கு மேல் அரசின் செக் ஷன்-17 பிரிவுக்கு உட்பட்ட நிலப்பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு
அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு: அழிக்கப்படும் மரங்கள்

பந்தலுார்:பந்தலுார் முக்கட்டி பகுதியில், யானை வழித்தடங்களில் சோலார் மின் வேலி அமைத்து, விவசாயம் மற்றும் கட்டுமான பணிகள் நடந்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.பந்தலுார் அருகே முக்கட்டி பகுதியில் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி, மூன்று 'சர்வே' எண்களில், 100 ஏக்கருக்கு மேல் அரசின் செக் ஷன்-17 பிரிவுக்கு உட்பட்ட நிலப்பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அடர்த்தியான வனப்பகுதி அளிக்கப்பட்டு தேக்கு உட்பட பலவகை மரங்கள் கேரளாவுக்கு கடத்தி செல்லப்பட்டன.அது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான நிலையில், அப்போதைய வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து மரக்கடத்தலை தடுத்தனர்.தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் படி,'செக்சன்-17 நிலப்பகுதிகளில், சிறு பொருட்களை கூட அகற்ற கூடாது,' என, எச்சரிக்கை விடுத்து கண்காணித்து வந்தனர். தற்போதைய ஆட்சி மாற்றத்துக்கு பின், அந்த உத்தரவுகள் 'காற்றில்' பறக்க விடப்பட்டுள்ளன.இப்பகுதியில் சில அரசு அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். யானைகள் உள்ளிட்ட வனவிலங்கு வழித்தடங்களில் சோலார் மின் வேலி அமைத்து, விவசாயம் மற்றும் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இங்குள்ள பழமையான மரங்களை அழிக்கும் வகையில், காயவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து, மக்கள் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.ஆர்.டி.ஓ., சரவண கண்ணன் கூறுகையில்,''யானை வழித்தடத்தில் சோலார் மின் வேலி அமைத்துள்ளது குறித்தும், அப்பகுதியில் விவசாயம் செய்வது பற்றியும் நேரில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X