காலாண்டு தேர்வுக்கு ஆயத்தப்பணி  பள்ளிகளில் தீவிரம் 

Added : செப் 21, 2022 | |
Advertisement
உடுமலை:இரு ஆண்டுகளுக்குப்பின், பள்ளிகளில் காலாண்டுத்தேர்வு நடத்தப்படவுள்ள நிலையில், அதற்கான ஆயத்தப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கொரோனா பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டன.அதன் பாதிப்பு குறைந்ததையடுத்து, தற்போது பள்ளிகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு

உடுமலை:இரு ஆண்டுகளுக்குப்பின், பள்ளிகளில் காலாண்டுத்தேர்வு நடத்தப்படவுள்ள நிலையில், அதற்கான ஆயத்தப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கொரோனா பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டன.அதன் பாதிப்பு குறைந்ததையடுத்து, தற்போது பள்ளிகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.மேலும் காலாண்டுத்தேர்வுக்கான ஏற்பாடுகளும் பள்ளிகளில் நடந்து வருகின்றன. இப்பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உடுமலை கல்வி மாவட்டத்தில், 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும், 26 முதல், 30ம் தேதி வரையும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, நாளை முதல் 30ம் தேதி வரையும் காலாண்டுத்தேர்வு நடத்தப்படவுள்ளது.தேர்வை மாணவர்கள் சிறப்பாக எழுத, ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணியை விரைந்து முடித்துள்ளனர். அதேநேரம், அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதை உறுதி செய்யும் வகையில் ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சிப்பள்ளிகளில், மாணவ, மாணவியர் எவரும் 'ஆப்சென்ட்' ஆகாமல் தேர்வு எழுத உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதேபோல, வகுப்புக்கு வராமல் உள்ள மாணவர்களை கண்டறிந்து, அவர்களையும் தேர்வு எழுதச்செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவர்களின் பெற்றோர்களிடம் தேர்வு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு தேர்வு நாளன்றும், அந்தந்த பாடங்களுக்கு உரிய வினாத்தாள்களை பெறவும் அறிவுறுத்தப்பட்டது. தேர்வுக்கு இடைப்பட்ட நாட்களில் திருப்புதல் வகுப்புகள் நடத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X