பள்ளியில் தலைமையாசிரியருக்கு உதை; தி.மு.க., கவுன்சிலரின் கணவர் அராஜகம்

Updated : செப் 21, 2022 | Added : செப் 21, 2022 | கருத்துகள் (57) | |
Advertisement
அவிநாசி : அவிநாசியில் உள்ள துவக்கப்பள்ளியில், மாணவர்கள் முன், பள்ளி தலைமையாசிரியரை ஆளுங்கட்சி பெண் கவுன்சிலரின் கணவர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட்சி, 17வது வார்டு, கைகாட்டிபுதுாரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 59 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பள்ளி அருகே வசிப்பவர்கள் பள்ளி வளாகத்துக்குள் குப்பையை
அவிநாசி, பள்ளி, தலைமையாசிரியர், திமுக கவுன்சிலர், Avinasi, School, Headmaster, DMK Councillor,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



அவிநாசி : அவிநாசியில் உள்ள துவக்கப்பள்ளியில், மாணவர்கள் முன், பள்ளி தலைமையாசிரியரை ஆளுங்கட்சி பெண் கவுன்சிலரின் கணவர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட்சி, 17வது வார்டு, கைகாட்டிபுதுாரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 59 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பள்ளி அருகே வசிப்பவர்கள் பள்ளி வளாகத்துக்குள் குப்பையை கொட்டுகின்றனர் என்ற புகார் நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது.



latest tamil news


இது தொடர்பாக, அந்த வார்டு ஆளுங்கட்சி கவுன்சிலர் ரமணியின் கணவர் துரைசாமிக்கும், பெற்றோருக்கும் இடையே, நேற்று முன்தினம் மாலை பள்ளி வளாகத்தில் காரசார விவாதம் நடந்தது அப்போது, தலைமையாசிரியர் செந்தாமரைக்கண்ணன் குறுக்கிட்டு பேசினார். ஒரு கட்டத்தில், தலைமையாசிரியரின் கழுத்தை பிடித்து இறுக்கி, துரைசாமி தள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது: பள்ளியை ஒட்டி வசிப்பவர்கள், குப்பை மற்றும் கழிவு நீரை பள்ளி வளாகத்துக்குள் கொட்டுகின்றனர். இதை கண்டித்ததால் ஆத்திரமடைந்த பாஸ்கர் என்பவர் பள்ளிக்குள் புகுந்து, ஏழு மாணவர்களை தாக்கியுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி சமாதானம் செய்தனர்.இப்பிரச்னையில் தலையிட்ட வார்டு கவுன்சிலரின் கணவர் துரைசாமி, விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, என் கழுத்தை பிடித்து இறுக்கினார். இவ்வாறு அவர் கூறினார்.



கற்கள் வீசினர்


துரைசாமி கூறியதாவது: பள்ளிக்குள் குப்பை கொட்டும் பிரச்னை செய்பவர் வீட்டின் மீது கற்களை வீசுமாறு செந்தாமரைக்கண்ணன், மாணவர்களை துாண்டி விடுகிறார்.இதுபற்றி பேச போன என்னை ஒருமையில் பேசினார். 'வீடியோ'வில், நான் அவரை தாக்கிய காட்சிகளை மட்டுமே பரப்பி விட்டிருக்கின்றனர். அங்கிருந்த பெற்றோர் என்னை தாக்கியதை மறைத்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.அவிநாசி வட்டாரக் கல்வி அலுவலர் சுமதியிடம் கேட்ட போது, பதில் அளிக்க மறுத்து விட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A P - chennai,இந்தியா
28-செப்-202210:58:06 IST Report Abuse
A P இந்த கேடுகெட்ட கவுன்சிலரை பதவி நீக்கம் செய்தல்தான் மற்ற இதுபோன்ற கவுன்சிலர்களுக்கு புத்தி வரும்.
Rate this:
Cancel
Ranga - பாண்டிய நாடு, தமிழக ஒன்றியம். ,இந்தியா
22-செப்-202210:04:06 IST Report Abuse
Ranga திராவிட மாடல் ஆட்சி
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
21-செப்-202216:38:45 IST Report Abuse
தமிழ்வேள் வேணும் கட்டைக்கு வேணும் ...வெண்கல கட்டைக்கு வேணும் " - என்று சந்தோஷப்படலாம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X