சோழவந்தான் : திருமங்கலம் பகுதி ரவுடி குண்டார் என்ற சக்திவேல் 37, கடந்த ஜூன் 30ல் சிறையில் இருந்து ஜாமினில் வந்தவர் மேலக்கால் அருகே கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் திருமங்கலம் ரமேஷ்பாபு 28, சுகுமார் 29, சபரிநாதன் 35, ஆனையூர் அலெக்ஸ்குமார் 28, கைதாகி சிறையில் உள்ளனர். இவர்கள் மீது கொலை குற்ற வழக்குகள் உள்ளதால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி.,சிவபிரசாத் பரிந்துரையில் கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement