சென்னை: விழா காலங்களில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதை தடுக்கும் விதமாக, ஆம்னி பஸ் சங்கத்தின் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.
இது குறித்து, ஆம்னி பஸ் சங்கம் கூறியிருப்பதாவது: விழா காலங்களில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதை தடுக்கும் விதமாக, ஆம்னி பஸ் சங்கத்தின் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
www.aoboa.co.in என்ற இணையதளத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணத்தை ஆம்னி பஸ் வசூலிக்கும் பட்சத்தில் புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளது.
கட்டணம் நிர்ணயம்:
மதுரைக்கு ரூ.690 முதல் ரூ.1940யும், திருநெல்வேலிக்கு ரூ.870 முதல் ரூ.2,530யும், திருச்சிக்கு ரூ.520 முதல் ரூ.1,470யும், கோவைக்கு ரூ.720 முதல் ரூ.2090யும் நிர்ணயம் செய்துள்ளது.