புதுச்சேரி: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இதுவரை 747 குழந்தைகள் காய்ச்சல் பாதிப்பிற்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதில் நேற்று மட்டும் 50 குழந்தைகள் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஒட்டு மொத்தமாக 200 குழுந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.