ஒரே நாளில் 15% உயர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா பங்குகள்

Updated : செப் 21, 2022 | Added : செப் 21, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
பொதுத் துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவை ஆர்பிஐ., அதிக வாராக் கடன் மற்றும் வருவாய் பிரச்னை காரணமாக பலவீனமான வங்கியாக பட்டியலிட்டு கண்காணித்து வந்தது. அதிலிருந்து 5 ஆண்டுகளுக்கு பின்னர் அவ்வங்கியை நீக்கியதால் அந்நிறுவனப் பங்குகள் இன்று 15 சதவீத உயர்வுடன் தொடங்கின.ஆர்.பி.ஐ.,யின் கண்காணிப்பு வளையமான பிசிஏ., ஃப்ரேம்ஒர்க்கின் (PCA framework) கீழ் ஒரே வங்கியாக சென்ட்ரல்
Centralbankofindia, StockSurge, Nifty, Sensex, பங்குச்சந்தை

பொதுத் துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவை ஆர்பிஐ., அதிக வாராக் கடன் மற்றும் வருவாய் பிரச்னை காரணமாக பலவீனமான வங்கியாக பட்டியலிட்டு கண்காணித்து வந்தது. அதிலிருந்து 5 ஆண்டுகளுக்கு பின்னர் அவ்வங்கியை நீக்கியதால் அந்நிறுவனப் பங்குகள் இன்று 15 சதவீத உயர்வுடன் தொடங்கின.

ஆர்.பி.ஐ.,யின் கண்காணிப்பு வளையமான பிசிஏ., ஃப்ரேம்ஒர்க்கின் (PCA framework) கீழ் ஒரே வங்கியாக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா இருந்தது. இந்த வங்கியின் நிகர வாராக் கடன்களின் அளவு மிக அதிகமாக இருந்ததாலும், வருவாய் மிகக் குறைவாக இருந்ததன் காரணமாக 2017ல் ஆர்.பி.ஐ., இந்த கண்காணிப்பின் கீழ் வைத்தது.



latest tamil news


அப்போதிலிருந்து 2020 அக்டோபர் வரை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நிறுவனப் பங்குகள் 90 சதவீதம் அளவிற்கு சரிவைச் சந்தித்தது. பின்னர் ஏற்றம் கண்டது. இந்நிலையில் இன்று இதன் பங்குகள் 15% உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியது. பலர் அந்த நிலையில் விற்பனையை தொடங்கியதால் 7 சதவீதத்திற்கு மேல் சரிந்து இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி ஒரு பங்கின் விலை ரூ.21.80-க்கு விற்பனையாகிறது.



2015 நிதியாண்டுக்கு பின்னர் சென்ட்ரல் பேங்க் 2022 நிதியாண்டில் அதன் முழு ஆண்டு லாபத்தை பதிவு செய்தது. 2022 நிதியாண்டில் ரூ.1,045 கோடி லாபம் ஈட்டியுள்ளது. ஜூன் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 14.2 சதவீதம் உயர்ந்து ரூ.234.78 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் அதன் லாபம் ரூ.205 .58 கோடியாக இருந்தது.


latest tamil news


அதே போல் சென்ட்ரல் வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் கடந்த ஆண்டு 15.92 சதவீதமாக இருந்தது. தற்போது 14.9 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வாராக் கடன் அளவு 5.09 சதவீதத்திலிருந்து 3.93 சதவீதமாக குறைந்துள்ளது. மொத்த கடன் அளவு 11 சதவீதம் உயர்ந்து 1.95 லட்சம் கோடியாக உள்ளது. மொத்த கடன் புத்தகத்தில் விவசாய சில்லறை கடன்கள், சிறு கடன்கள் 66% பங்களிக்கின்றன. மொத்த டெபாசிட் தொகை 3.4 சதவீதம் உயர்ந்து 3.4 லட்சம் கோடியாக உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-செப்-202215:07:22 IST Report Abuse
ஆரூர் ரங் வாராக்கடன் வாராக்கடன் என்று புலம்புவதில் அர்த்தமில்லை🤔. மற்ற வணிகங்கள் போல வங்கித் தொழிலும் ரிஸ்க் உள்ள வணிகமே. கடன் வாங்கும் வணிகர் எடுக்கும் ரிஸ்க்கில் கால் பங்காவது வங்கிக்கும் உண்டு. வியாபாரம் தோல்வியடைந்து வாராக்கடன் வந்தால் சிறைத்தண்டனை என்ற விதி கொண்டு வந்தால் 90 சதவீத தொழில் முனைவோர்கள் ஓடியே போய் விடுவர். பொருளாதார வளர்ச்சியும் இருக்காது வேலை வாய்ப்பு பெருகாது.
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
21-செப்-202218:01:16 IST Report Abuse
Barakat Aliவருமான வரி கட்டுவோர்தான் ..... அரசியல் கட்சிகளுக்கு சம்பாதிப்பவர்களுக்கு வரித்தொல்லை இல்லை .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X