அணுஆயுதங்களை பயன்படுத்துவோம்: மேற்கத்திய நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை

Updated : செப் 21, 2022 | Added : செப் 21, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
மாஸ்கோ: ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.ரஷ்ய நாட்டு மக்களுக்கு டிவி மூலம் அதிபர் புடின் ஆற்றிய உரை: ரஷ்யா ராணுவ வீரர்களை உடனடியாக அணி திரட்ட உள்ளோம். ஒட்டுமொத்த மேற்கத்திய நாட்டு ராணுவத்திற்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்து வருவதால், இந்த நடவடிக்கை மிகவும்
Putin,Vladimir Putin,Ukraine, partial mobilisation,  reservists,   Russia,fight, Western military machine,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மாஸ்கோ: ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.ரஷ்ய நாட்டு மக்களுக்கு டிவி மூலம் அதிபர் புடின் ஆற்றிய உரை: ரஷ்யா ராணுவ வீரர்களை உடனடியாக அணி திரட்ட உள்ளோம். ஒட்டுமொத்த மேற்கத்திய நாட்டு ராணுவத்திற்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்து வருவதால், இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது. நாட்டை பாதுகாப்பதற்கு அனைத்தையும் பயன்படுத்துவேன். இதனை வெற்று பேச்சாக எடுத்து கொள்ளக்கூடாது.
அழிக்க முயற்சிlatest tamil news


மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவை பிரிக்கவும், பலவீனப்படுத்தி அழிக்கவும் முயற்சிக்கின்றனர். அந்நாடுகள் கடந்த 1991ல் ரஷ்யாவை பிரித்ததாகவும், தற்போதும் அதேபோன்று பிரிக்க நேரம் வந்துவிட்டதாக பேசுகின்றனர். ரஷ்யாவை பல நாடுகளாக பிரிக்க வேண்டும் என்கின்றனர்.மேற்கத்திய நாடுகளின் ஆலோசனையை கேட்கும் உக்ரைன், அந்நிய கூலிப்படையினர், நாட்டவர்கள், நேடோ பயிற்சி பெற்ற வெளிநாட்டு ராணுவ வீரர்களை அழைத்து வருகிறது. இன்று நமது வீரர்கள், ஆயிரம் கி.மீ., தூர எல்லையில் போரிட்டு வருகிறது. ஒட்டுமொத்த மேற்கத்திய ராணுவ இயந்திரங்களுக்கு எதிராக போரிட்டு வருகிறது.
போரின் நோக்கம்


உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எல்லை மீறி செயல்பட்டு வருகின்றன. ரஷ்யாவிடம் அனைத்து வகையான ஆயுதங்கள் உள்ளன. அவை நேடோ வைத்திருக்கும் ஆயுதங்களை விட நவீனரகம் வாய்ந்தவை. நமது நாட்டின் பிராந்திய ஒற்றுமைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் மற்றும் மக்களையும், நாட்டையும் பாதுகாப்பதற்கு நம்மிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவோம். இது மிரட்டலை உதாசீனப்படுத்த வேண்டாம்.எங்களுக்கு அணுஆயுத மிரட்டல் விடும் அனைவரும், நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ரஷ்யர்கள் அதிகம் வசிக்கும் டான்பாஸ் பிராந்தியத்தை உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதே இந்த போரின் நோக்கம் ஆகும். இவ்வாறு புடின் பேசினார்.


latest tamil news

பலி எண்ணிக்கை

புடின் பேசியதை தொடர்ந்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி சொய்ஜூ கூறுகையில், பகுதி ரீதியாக 3 லட்சம் ராணுவ வீரர்கள் அணி திரட்டப்படுவார்கள். உக்ரைன் மீதான தாக்குதலின் 5,937 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் தரப்பில், பலி எண்ணிக்கையானது இது போல் 10 மடங்கு இருக்கும். 61,207 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி

உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் கூறுகையில். புடின் உரை மூலம் ரஷ்யா பலவீனமடைந்து வருவது வெளிப்படுவதாகவும், உக்ரைன் பகுதிகளை, ரஷ்யாவுடன் இணைக்கும் முயற்சியை ஏற்று கொள்ள மாட்டோம் என்றார்.பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்ய வீரர்கள் படை திரட்டப்படுவது என்பது, படையெடுப்பு தோல்வி அடைந்ததை காட்டுவதாகவும், எந்தளவு மிரட்டல் விடுத்தாலும் போரில் தோல்வி அடைந்ததை ரஷ்யா மறைக்க முடியாது. உக்ரைன் வெற்றி பெற்று வருகிறது. சர்வதேச சமூகம் ஒற்றுமையாக உள்ளது. சர்வதேச அளவில் ரஷ்யா தனிமைபடுத்தப்பட்டுள்ளது எனக்கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yogeshananda - Erode,இந்தியா
21-செப்-202220:55:05 IST Report Abuse
Yogeshananda சீக்கிரமா செய்யுங்கப்பா
Rate this:
Cancel
21-செப்-202220:25:53 IST Report Abuse
ஆரூர் ரங் ரஷ்யப் படைகள் வெறும் கூலிப்படைதான். அதில் யாருக்கும் தேசபக்தி கிடையாது . ஆப்டர் ஆல் பணம் சம்பளத்துக்காக உழைக்கிறார்கள். சாவதற்கு பயந்து பின்வாங்கும் நிலை .இதெல்லாம் ஒரு போர்? இதனை வைத்து ஆறு மாதங்களாக உலக பொருளாதாரத்தை தேய வைத்துக் கொண்டிருக்கிறார் . புட்டின். நவீன ஹிட்லர் மூன்று லட்சம் ஆட்களைத் தேர்வு செய்து பயிற்சி கொடுத்து எப்போ சண்டை போடுவார்?
Rate this:
Cancel
sunny raja -  ( Posted via: Dinamalar Android App )
21-செப்-202219:33:27 IST Report Abuse
sunny raja எதுக்காக ருசியா உக்ரேனை இணைக்கப்பார்க்கிறதுன்னு தெரியாம கருத்து போடறானுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X