புல்லட் ப்ரூஃப் உடைகளுக்கு சீன மூலப்பொருட்களை பயன்படுத்த தடை

Updated : செப் 21, 2022 | Added : செப் 21, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்ட புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகளில் சீன மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், ஒப்பந்தம் பெறும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தங்களுக்கு சீன நிறுவனங்களுடன் தொடர்பு இல்லை என சான்றளிக்க வேண்டும் என்பதை பாதுகாப்பு அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது.இந்திய ராணுவத்திற்கு கவச உடைகள் தேவையானவையாக உள்ளன. புல்லட் ப்ரூஃப்
Bulletproofjacket, ProtectiveGears, IndianArmy, ராணுவம், புல்லட்ப்ரூப்

ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்ட புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகளில் சீன மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், ஒப்பந்தம் பெறும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தங்களுக்கு சீன நிறுவனங்களுடன் தொடர்பு இல்லை என சான்றளிக்க வேண்டும் என்பதை பாதுகாப்பு அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது.

இந்திய ராணுவத்திற்கு கவச உடைகள் தேவையானவையாக உள்ளன. புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள், கையுறைகள், ஹெல்மெட்டுகள் போன்றவை இதில் அடங்கும். உள்ளூரில் கலவரங்களை கட்டுப்படுத்துவதில் தொடங்கி, எல்லையை பாதுகாப்பது வரை கவச உடைகள் தான் ராணுவத்தினருக்கு பக்கபலமாக இருக்கும். ராணுவத்திற்கு மொத்தமாக வழங்கப்பட்ட புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகளில் குறிப்பிட்ட அளவு சீன மூலபொருட்கள் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.


latest tamil news


2019லேயே இப்பிரச்னை எழுப்பப்பட்டது. இந்திய ராணுவம் ஜாக்கெட்டுகளுக்காக செலுத்திய ரூ.639 கோடியில் ஒரு பகுதி சீன நிறுவனங்களுக்கு சென்றதாக கூறப்பட்டது. ஒப்பந்தத்தை வென்ற இந்திய நிறுவனம் சப்ளையர்களை மேற்கத்திய நாட்டிலிருந்து மாற்றியதால் இது நிகழ்ந்ததாக கூறுகின்றனர். அதற்கு முன்னதாக இந்திய ஆயுதப் படைகள் பயன்படுத்திய பாதுகாப்பு உடைகளின் மூலப்பொருட்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஒரு சில நிறுவனங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.


latest tamil news


இந்நிலையில் கடலோரக் காவல்படை 746 புல்லட் ப்ரூஃப் உடைகளுக்கு வழங்கிய புதிய டெண்டரில் சீனாவிலிருந்து மூலப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் ஒரு குறிப்பிட்ட ஷரத்தை கொண்டு வந்துள்ளது. டெண்டரில் பங்கேற்கும் இந்திய விற்பனையாளர்கள் சீனாவிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய மாட்டோம் என குறிப்பிட்டு சான்றிதழ் சமர்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
21-செப்-202222:45:11 IST Report Abuse
தியாகு அன்பான ராணுவத்தினரே, உங்கள் புல்லட் ப்ரூஃப் உடைகளை பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளவும். இல்லனா திமுகவினர் ஆட்டையை போட்டுவிட்டு குளிர்காலத்தில் ஊட்டி, கொடைக்கானலுக்கு சென்று உங்கள் உடைகளை ஸ்வட்டர் மாதிரி பயன்படுத்திக்கொள்வார்கள்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
21-செப்-202222:04:31 IST Report Abuse
Ramesh Sargam சீன பொருட்கள் எல்லாவற்றிற்கும் தடை விதிக்கவேண்டும்.
Rate this:
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
21-செப்-202222:53:29 IST Report Abuse
தியாகு முதலில் உலக பொருளாதார கொள்கை சட்டம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளவும். முரசொலி மட்டும் படிக்கவேண்டாம். எந்த நாடும் எந்த நாட்டு பொருட்களுக்கும் தடை விதிக்கமுடியாது. அவ்வாறு செய்தால் வடகொரியா, ஈரான் மாதிரி நாமும் தனித்துவிடப்படுவோம். வேண்டுமானால் அந்த நாட்டுக்காரர்கள் பிற நாட்டு பொருட்களை வாங்காமல் தவிர்க்கலாம். நான் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் பெரும்பாலும் இந்திய தயாரிப்புகள். நீங்களும் சீன பொருட்களுக்கான மாற்று இந்திய பொருட்களை வாங்கவும். சப்பை மூக்கன் தானாக அடங்குவான்....
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
21-செப்-202221:05:16 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக் கூடாதுன்னு சொல்லுவா.. பார்த்தா படு சங்கடமா இருக்கும். அதே வகையில் சாப்பிடும் உணவு (முக்கியமா கார்ப்பரேட் உணவு) அப்புறம் இறக்குமதி செய்யப்படும் பொருள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X