ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்ட புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகளில் சீன மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், ஒப்பந்தம் பெறும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தங்களுக்கு சீன நிறுவனங்களுடன் தொடர்பு இல்லை என சான்றளிக்க வேண்டும் என்பதை பாதுகாப்பு அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது.
இந்திய ராணுவத்திற்கு கவச உடைகள் தேவையானவையாக உள்ளன. புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள், கையுறைகள், ஹெல்மெட்டுகள் போன்றவை இதில் அடங்கும். உள்ளூரில் கலவரங்களை கட்டுப்படுத்துவதில் தொடங்கி, எல்லையை பாதுகாப்பது வரை கவச உடைகள் தான் ராணுவத்தினருக்கு பக்கபலமாக இருக்கும். ராணுவத்திற்கு மொத்தமாக வழங்கப்பட்ட புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகளில் குறிப்பிட்ட அளவு சீன மூலபொருட்கள் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
2019லேயே இப்பிரச்னை எழுப்பப்பட்டது. இந்திய ராணுவம் ஜாக்கெட்டுகளுக்காக செலுத்திய ரூ.639 கோடியில் ஒரு பகுதி சீன நிறுவனங்களுக்கு சென்றதாக கூறப்பட்டது. ஒப்பந்தத்தை வென்ற இந்திய நிறுவனம் சப்ளையர்களை மேற்கத்திய நாட்டிலிருந்து மாற்றியதால் இது நிகழ்ந்ததாக கூறுகின்றனர். அதற்கு முன்னதாக இந்திய ஆயுதப் படைகள் பயன்படுத்திய பாதுகாப்பு உடைகளின் மூலப்பொருட்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஒரு சில நிறுவனங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கடலோரக் காவல்படை 746 புல்லட் ப்ரூஃப் உடைகளுக்கு வழங்கிய புதிய டெண்டரில் சீனாவிலிருந்து மூலப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் ஒரு குறிப்பிட்ட ஷரத்தை கொண்டு வந்துள்ளது. டெண்டரில் பங்கேற்கும் இந்திய விற்பனையாளர்கள் சீனாவிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய மாட்டோம் என குறிப்பிட்டு சான்றிதழ் சமர்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது.
ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்ட புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகளில் சீன மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், ஒப்பந்தம் பெறும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது