நீரா ராடியா மீதான 14 வழக்கில் குற்றம் நடந்ததாக தெரியவில்லை: உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு

Updated : செப் 21, 2022 | Added : செப் 21, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
புதுடில்லி: 'அரசியல் தரகர் ' நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் தொடர்பான விசாரணையில், எந்தவித குற்றங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், இதனால் 14 வழக்கு விசாரணைகளை ரத்து செய்வதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கூறியுள்ளது.'ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. , 'அரசியல் தரகர்' நீரா ராடியா,
NiiraRadia, Tapes, CBI,  Supreme Court,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: 'அரசியல் தரகர் ' நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் தொடர்பான விசாரணையில், எந்தவித குற்றங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், இதனால் 14 வழக்கு விசாரணைகளை ரத்து செய்வதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கூறியுள்ளது.'ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. , 'அரசியல் தரகர்' நீரா ராடியா, 'ஸ்பெக்டரம்' உள்ளிட்ட பல்வேறு விவகாரம் தொடர்பாக, தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுடன் பேசிய, தொலைபேசி உரையாடல்கள், வெளிச்சத்துக்கு வந்தன. இந்த தொலைபேசி உரையாடல் பதிவுகளை, கசிய விட்டதை எதிர்த்து, தொழிலதிபர் ரத்தன் டாடா, சுப்ரீம் கோர்ட்டில், மனுதாக்கல் செய்தார். தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த மனுவில், நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவுகளை ஆய்வு செய்த சிறப்பு விசாரணை குழு சில முக்கியமான வர்த்தக பரிமாற்றங்களில் முறைகேடு நடந்துள்ளதை கண்டுபிடித்துள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உரையாடல்களை முழுவதும் வெளியிட்டு விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறியிருந்தது.


latest tamil newsகடந்த 2013ம் ஆண்டில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 5,800க்கும் மேற்பட்ட உரையாடல்களை ஆய்வு செய்து அதில் 14 பிரச்னைகள் உள்ளதை கண்டுபிடித்த சிபிஐ அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதனடிப்படையில், சிபிஐ 14 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தியது.latest tamil news


இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்த சிபிஐ சீல் வைக்கப்பட்ட விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில், சுமார் 8 ஆயிரம் தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்த பிறகு, நீரா ராடியா மீதான 14 வழக்குகளில் முதல்கட்ட விசாரணையை கைவிடுவதாகவும், உரையாடல் தொடர்பான அனைத்து பதிவுகளையும் ஆய்வு செய்ததில், அதில் எந்தவிதமான குற்றநடவடிக்கைகளும் நடந்ததற்கான பேச்சுகளும் இடம்பெறவில்லை எனக்கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
22-செப்-202207:08:24 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN ராசாத்தி அம்மாள் சிகிச்சைக்கு அமித்து ஷா ஏற்பாடு செஞ்சப்பவே சந்தேகம்... நேத்து சூட்லர் வேற சொல்லியாச்சு கூட்டணி இல்லன்னு.. அப்போ கூட்டணி உறுதியான மாதிரிதான்.. நாங்க 6 G வேற பார்க்க வேண்டியிருக்கு..
Rate this:
Cancel
Rajan -  ( Posted via: Dinamalar Android App )
22-செப்-202203:15:00 IST Report Abuse
Rajan கூட்டத்த கலைக்க எங்வளவு கஷ்டப்பட்டிருக்கேன்.... நீ மட்டும் என்ன ஒரு மாதிரியா பாக்குற....போங்க போங்க போய்கிட்டே இரு....அது இருக்கட்டும் 2G மோசடியில கனியும் ராஜாவும் உள்ள போனது எந்த ராஜ்யத்துலங்க? BJP யா அவங்கள ஜெயில்ல போட்டது.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
21-செப்-202223:31:33 IST Report Abuse
Vijay D Ratnam நீரா ராடியா ஒரு இடைத்தரகர். Vaishnavi Corporate Communications Pvt Ltd. என்ற பெயரில் அரசுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே உள்ள ஒரு பொதுஜன தொடர்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். அவ்வளவுதான். டீலிங் முடிந்ததும் கமிஷன் பெற்று கொண்டு போய்ட்டே இருக்கவேண்டும். அதுதான் அவர்கள் வேலை. 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் மட்டுமல்ல Tata Group, Unitech Group, Confederation of Indian Industry, Hindustan Construction Company GMR Group. இவற்றுக்கும் இடைத்தரகராக செயல்பட்டவர். அவர் தன்னுடைய வேலையை செய்து இருக்கிறார். அவ்வளவுதான். ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி கொள்ளை ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஃபஸ்ட் அக்யுஸ்ட் ஆண்டிமுத்து ராசா. அவருக்கு ஆப்பு கன்ஃபார்ம். அப்பட்டமாக ஆட்டயப்போட்டு வசமாக மாட்டிக்கொண்ட கேஸ். தப்பிக்க வாய்ப்பே இல்லை.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-செப்-202206:58:27 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்புள்ளையாண்டானை பத்திரமா கொண்டு போங்கப்பா. பாவம், இன்னும் காச்சல் ஜாஸ்தி, பினாத்திக்கிட்டே இருக்காப்புலே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X