பொது தேர்வு மறுகூட்டல் இன்று 'ரிசல்ட்' வெளியீடு

Added : செப் 21, 2022 | |
Advertisement
சென்னை:பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு எழுதியவர்களுக்கு, இன்று மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டில் நடந்த, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 துணை தேர்வு எழுதி, மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தோருக்கு, இன்று பகல் 12:00 மணிக்கு 'ரிசல்ட்'

சென்னை:பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு எழுதியவர்களுக்கு, இன்று மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டில் நடந்த, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 துணை தேர்வு எழுதி, மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தோருக்கு, இன்று பகல் 12:00 மணிக்கு 'ரிசல்ட்' வெளியிடப்படும்.மதிப்பெண் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டால், மதிப்பெண் மாறியவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்படும்.பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்களின் விடைத்தாளில், எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என, கருத வேண்டும்.மதிப்பெண் மாற்றம் உள்ளவர்கள், தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 துணை தேர்வு எழுதியவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X