50 சவரன் நகை கொள்ளை சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது| Dinamalar

50 சவரன் நகை கொள்ளை சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது

Added : செப் 21, 2022 | |
பண்ருட்டி:பண்ருட்டி அருகே, வீட்டின் கதவை உடைத்து, 50 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த லிங்கா ரெட்டிப்பாளையம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சீனுவாசன், 49; துபாயில் பணிபுரிகிறார். இவரது மனைவி கவுரி, மகன் பாலகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள், கடந்த 30ம் தேதி கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றனர். கவுரி
50 சவரன் நகை கொள்ளை சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது

பண்ருட்டி:பண்ருட்டி அருகே, வீட்டின் கதவை உடைத்து, 50 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த லிங்கா ரெட்டிப்பாளையம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சீனுவாசன், 49; துபாயில் பணிபுரிகிறார். இவரது மனைவி கவுரி, மகன் பாலகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள், கடந்த 30ம் தேதி கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றனர். கவுரி தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

சுற்றுலா செல்வதற்கு முன், வீட்டில் உள்ள நாயை பார்த்துக் கொள்ளுமாறு, அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்களிடம் கூறிவிட்டு சென்றார். கடந்த 1ம் தேதி காலை, நாய்க்கு உணவளிக்க சென்றபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து, அக்கம்பக்கத்தினர் கவுரிக்கு தகவல் தெரிவித்தனர். மறுநாளே ஊருக்கு திரும்பிய கவுரி, வீட்டில் வைத்திருந்த 50 சவரன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக, போலீசில் புகார் அளித்தார்.

பண்ருட்டி டி.எஸ்.பி., சபியுல்லா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. இந்நிலையில், பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார், பண்ருட்டி - கடலுார் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள், நெல்லிக்குப்பம் எய்தனுார் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்முருகன், 29; கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆர்யாநத்தம் வடக்கு தெருவை சேர்ந்த இளையபெருமாள், 28, என்பதும், அவர்களுடன் வந்தது 16 வயது சிறுவன் என்பதும் தெரிந்தது. தொடர் விசாரணையில், லிங்காரெட்டிப்பாளையம் சீனுவாசன் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர்.

அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 31 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், லேப்டாப், கேமரா உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X