அதிரடி பணியிட மாற்றம்; செயலர்கள் விடுவிப்பு

Added : செப் 21, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியங்களில் பணியாற்றிய ஊராட்சி செயலர்கள் 45 பேர், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.கோவை மாவட்டத்தில் உள்ள, 12 ஒன்றியங்களில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஊராட்சி அல்லது வட்டாரத்தில் ஊராட்சி செயலர்கள் பணியிடமாற்றமின்றி பணியாற்றி வந்தனர். இதனால், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியங்களில் பணியாற்றிய ஊராட்சி செயலர்கள் 45 பேர், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள, 12 ஒன்றியங்களில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஊராட்சி அல்லது வட்டாரத்தில் ஊராட்சி செயலர்கள் பணியிடமாற்றமின்றி பணியாற்றி வந்தனர். இதனால், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.இதையடுத்து, மாவட்டம் முழுக்க உள்ள ஊராட்சிகளில் இருந்து, 84 ஊராட்சி செயலர்களை அதிரடியாக வேறு ஒன்றியங்களுக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பணியிட மாற்றம் அளிக்கப்பட்டிருந்த, பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில், 18 பேர்; தெற்கு வட்டாரத்தில், 8 பேர்; ஆனைமலை வட்டாரத்தில், 8 பேர்; கிணத்துக்கடவு வட்டாரத்தில், 11 பேர், என, மொத்தம், 45 பேரை அந்தந்த ஒன்றிய நிர்வாகங்கள் உடனடியாக பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளன.வேறு வட்டாரங்களில் இருந்து பணியிட மாற்றம் பெற்றவர்கள், புதிய இடங்களில் பணியில் இணைய துவங்கியுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X