மரக்கழிவால் ரோட்டில் இம்சை; நகராட்சி அதிகாரிகள் அலட்சியம்

Added : செப் 21, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில், வெட்டிய மரக்கிளையை அகற்றாமல் உள்ளதால், மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட நாச்சிமுத்து வீதியில் உள்ள அரச மரத்தில், கடந்த வாரம் இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. வெட்டப்பட்ட மரக்கிளைகள் சுத்தம் செய்யப்படாமல், பல நாட்களாக ரோட்டிலேயே இருந்தது.இதனால்,
மரக்கழிவால் ரோட்டில் இம்சை; நகராட்சி அதிகாரிகள் அலட்சியம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில், வெட்டிய மரக்கிளையை அகற்றாமல் உள்ளதால், மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட நாச்சிமுத்து வீதியில் உள்ள அரச மரத்தில், கடந்த வாரம் இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. வெட்டப்பட்ட மரக்கிளைகள் சுத்தம் செய்யப்படாமல், பல நாட்களாக ரோட்டிலேயே இருந்தது.இதனால், ரோட்டில் வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேகமாக வரும் வாகன ஓட்டுனர்கள், மரக்கிளை கிடப்பது தெரியாமல் விபத்துக்குள்ளாகின்றனர். பொதுமக்கள் புகார் எழுந்ததை தொடர்ந்து, மரக்கிளைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

இதேபோல், மகாலிங்கபுரத்தில் சக்தி விநாயகர் கோவில் வீதி, பல்லடம் ரோடு டாக்டர் முனுசாமி வீதியில், மரக்கிளை வெட்டப்பட்டு, ரோட்டோரம் குவிக்கப்பட்டு, பல நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது.இந்த பகுதிகளில் மரக்கிளைகள், இலைகளை சுத்தம் செய்ய வலியுறுத்தி மக்கள் பலமுறை புகார் அளித்தும், நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X