சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : செப் 21, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. தமிழகம் முழுதும் போதைப் பொருட்கள் தடையின்றி கிடைக்கின்றன, மாணவர்கள், இளைஞர்கள் சீரழிகின்றனர். இது குறித்து, சட்டசபையில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றும், இதுவரை நடவடிக்கை இல்லை. மாநிலம் முழுதும் கொலை, கொள்ளை, வழிப்பறிகள் நடந்து வருகின்றன. எல்லா துறைகளிலும் ஊழல்

'டவுட்' தனபாலு

அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. தமிழகம் முழுதும் போதைப் பொருட்கள் தடையின்றி கிடைக்கின்றன, மாணவர்கள், இளைஞர்கள் சீரழிகின்றனர். இது குறித்து, சட்டசபையில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றும், இதுவரை நடவடிக்கை இல்லை. மாநிலம் முழுதும் கொலை, கொள்ளை, வழிப்பறிகள் நடந்து வருகின்றன. எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. இவை பற்றியெல்லாம், மத்திய உள்துறை அமைச்சரிடம் கூறி, தமிழகத்தின் மீது கவனம் செலுத்தும்படி கோரிக்கை வைத்துள்ளேன்.

டவுட் தனபாலு: தமிழக அரசு பற்றி மத்திய அரசிடம், 'வத்தி' வச்சுட்டு வந்திருக்கீங்க... உங்க தலைவி ஜெயலலிதா பாணியில, 'தமிழக அரசை கலைக்கணும்'னு கேட்கலையா என்பது தான் எங்க, 'டவுட்!'


மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்:
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 37 சதவீதத்தில் இருந்து, 48 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டவுட் தனபாலு: முதல்வரின் காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றால், அந்த அளவுக்கு நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது என்று தானே அர்த்தமாகுது... இது, பெருமைப்பட வேண்டிய விஷயமா என்பது தான், 'டவுட்!'


முதல்வர் ஸ்டாலின்:
'எல்லார்க்கும் எல்லாம்' என்ற சமூக நீதி தத்துவத்தை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை நடத்தி வருகிறோம். மக்களுக்கு இன்றைய தேவை என்பது நீதி மட்டும் தான். அத்தகைய நீதியின் துாதுவர்களாக சட்டம் படிக்கும் நீங்கள், எதிர்காலத்தில் திகழ வேண்டும். சட்ட புத்தகங்களையும் தாண்டி, இந்த சமூகத்தையும் பாடமாக படிக்க வேண்டும். நீதிக்கு வெற்றி தேடி தரும் வழக்கறிஞர்களாக நீங்கள் விளங்க வேண்டும்.

டவுட் தனபாலு: இளம் வக்கீல்களுக்கு இவ்வளவு அறிவுரை சொல்றீங்களே... உங்க கட்சிக்காரர் ஆ.ராஜா கூட வக்கீலுக்கு படிச்சவர் தானே... அவரிடம், 'குறிப்பிட்ட எந்த மதத்தையும் இழிவுபடுத்தி பேசக் கூடாது'ன்னு என்றைக்காவது அறிவுறுத்தினீங்களா என்பது தான் எங்க, 'டவுட்!'

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
22-செப்-202214:15:01 IST Report Abuse
Suppan "எல்லார்க்கும் எல்லாம்'" இது சும்மா பேசுவதற்கு மட்டும்தானா? அப்படியே அந்த ஆண்டிமுத்து ராசாவின் சீடரையும் அடக்கி வாசிக்கச் சொல்வாரா?
Rate this:
Cancel
Sutha - Chennai,இந்தியா
22-செப்-202208:22:42 IST Report Abuse
Sutha திராவிட மாடல்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-செப்-202206:18:31 IST Report Abuse
D.Ambujavalli இவர்களும் சில காலம் ப்ராக்டீஸ் செய்தபின் ராசாக்களாக மாறினால் எதுவும் சொல்ல மாட்டார் அவரிடம் எந்த வகையில் மாட்டிக்கொண்டிருக்கிறாரோ, அதுதான் வாயைத் திறக்கவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X