ஏ.டி.எம்., இயந்திரத்தில் கொள்ளை முயற்சி

Added : செப் 21, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் மர்ம நபர்கள் ஏ.டி.எம்., இயந்திரத்தை, 'கேஸ் வெல்டிங்' வாயிலாக வெட்டி, பணம் திருட முயற்சி செய்துள்ளனர்.மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில், தனியார் கம்பெனி மருத்துவமனை வளாகத்தில், பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது.மேட்டுப்பாளையம் போலீசார், பத்ரகாளியம்மன் கோவில் வரை ரோந்து சென்று, இந்த ஏ.டி.எம்.,
ஏ.டி.எம்., இயந்திரத்தில் கொள்ளை முயற்சி

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் மர்ம நபர்கள் ஏ.டி.எம்., இயந்திரத்தை, 'கேஸ் வெல்டிங்' வாயிலாக வெட்டி, பணம் திருட முயற்சி செய்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில், தனியார் கம்பெனி மருத்துவமனை வளாகத்தில், பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது.மேட்டுப்பாளையம் போலீசார், பத்ரகாளியம்மன் கோவில் வரை ரோந்து சென்று, இந்த ஏ.டி.எம்., மையம், அருகே உள்ள கம்பெனி செக்யூரிட்டி அலுவலகம், பத்ரகாளியம்மன் கோவில் ஆகிய இடங்களில் உள்ள புத்தகத்தில் கையெழுத்து போட்டு வருவது வழக்கம். அவ்வாறு ரோந்து செல்லும்போது, ரோட்டில் ஆட்கள் மற்றும் வாகனங்கள் வந்தால், நிறுத்தி விசாரணை செய்வர்.

அந்த வகையில் நேற்று விடியற்காலை, 4:00 மணிக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து, இரண்டு போலீசார் ரோந்து சென்றனர். பரோடா வங்கி ஏ.டி.எம்., மையத்தில் கையெழுத்து போட, உள்ளே சென்றனர். அப்போது, ஏ.டி.எம்., இயந்திரத்தின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது.அதன் அருகே வெல்டிங் வைத்து தகரத்தை துண்டிக்கும் முயற்சி நடந்துள்ளது தெரியவந்தது. போலீசார் சுற்றுப்பகுதியில் ஆய்வு செய்த போது, வாழை தோட்டத்தில் கேஸ் சிலிண்டரும், வெல்டிங் வைக்கக்கூடிய டியூப் மற்றும்பைப் ஆகியவை கிடந்தன.

சம்பவ இடத்திற்கு கோவையில் இருந்து கைரேகை நிபுணர்கள் லோகேஷ், ரஞ்சித் ஆகியோர் வந்து, ஏ.டி.எம்., மையத்திலும், கேஸ் சிலிண்டர் மற்றும் வெல்டிங் ராட் ஆகியவற்றில் பதிவான கைரேகையை, பதிவு செய்தனர்.கோவை எஸ்.பி., பத்ரி நாராயணன் ஏ.டி.எம்., மையத்திற்கு வந்து, ஆய்வு செய்தார். அப்போது இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்- இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் ஆகியோரிடம், திருட்டு முயற்சியின் விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

போலீசார் ரோந்து வருவதை தெரிந்த மர்ம நபர்கள், வெல்டிங் செய்வதை பாதியில் நிறுத்தி விட்டு, வெல்டிங் ராடு, சிலிண்டரையும் வாழைத்தோட்டத்தில் துாக்கி வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.இந்த ரோட்டில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தும், விசாரணை நடத்தியும் வருகின்றனர். பணத்தை எடுக்க முடியாமல் மர்ம நபர்கள் தப்பிச் சென்றதால், இயந்திரத்தில் வைத்த பணம் திருட்டு போகாமல் தப்பியது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X