வளரிளம் பருவத்தினரிடம் வேலை வாங்கிய நிறுவனங்களுக்கு அபராதம்

Added : செப் 21, 2022 | |
Advertisement
கோவை : வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களுக்கு, 4.5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கோவை தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) காயத்ரி கூறியதாவது: கோவையிலுள்ள சைல்டுலைன், ரயில்வே சைல்டு லைன் புகாரின் அடிப்படையில், கோவையிலுள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் ரிப்பேர் சரிசெய்யும் மையங்கள், நுாற்பாலைகள், கோழிப்பண்ணைகளில் ஆய்வு

கோவை : வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களுக்கு, 4.5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) காயத்ரி கூறியதாவது: கோவையிலுள்ள சைல்டுலைன், ரயில்வே சைல்டு லைன் புகாரின் அடிப்படையில், கோவையிலுள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் ரிப்பேர் சரிசெய்யும் மையங்கள், நுாற்பாலைகள், கோழிப்பண்ணைகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் முறை ஒழித்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ், குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் தடுப்பு படையினர், ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், சைல்டு லைன் அமைப்பு மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.371 நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், 3 நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த, 7 வளரிளம் பருவத்தினர் மற்றும் 2 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

அவர்கள், மாவட்ட குழந்தை நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.பணிக்கு அமர்த்திய நிறுவனத்தின் மீது, குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் சட்டம் 1986 மற்றும் குழந்தை தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் திருத்தச்சட்டம், 2016ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், 2022 ஆகஸ்ட், செப்., மாதங்களில் ஆறு நிறுவனங்களின் மீது ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளில், தொடரப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்தது.

அந்நிறுவனங்களின் மீது, ரூ.4 லட்சத்து 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனத்துக்கு, ரூ. 20,000 முதல் அதிகபட்சம் 50,000 ரூபாய் வரை அபராதம் மற்றும் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், வேலைக்கு அனுப்பிய பெற்றோருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.இவ்வாறு, காயத்ரி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X