வளரிளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு; மாணவியருக்கு அறிவுரை

Added : செப் 21, 2022 | |
Advertisement
உடுமலை : உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், வளரிளம் பெண்களுக்குஊட்டச்சத்து விழிப்புணர்வு கருத்தரங்கம்நடந்தது.தேசிய ஊட்டச்சத்து மாத விழாயொட்டி, மத்திய, மாநில அரசுகள் சார்பில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளிலும், மாணவர்களுக்கு இதுதொடர்பான பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், போஷன்
வளரிளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு; மாணவியருக்கு அறிவுரை

உடுமலை : உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், வளரிளம் பெண்களுக்குஊட்டச்சத்து விழிப்புணர்வு கருத்தரங்கம்நடந்தது.

தேசிய ஊட்டச்சத்து மாத விழாயொட்டி, மத்திய, மாநில அரசுகள் சார்பில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளிலும், மாணவர்களுக்கு இதுதொடர்பான பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், போஷன் அபியான் திட்டத்தின் கீழ், குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள, அங்கன்வாடி மையங்கள் வாயிலாக, வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு கருத்தரங்கம், குடிமங்கலம், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடந்தது.

குடிமங்கலம் வட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் வேளாங்கண்ணி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் பழனிச்சாமி,அப்துல் காதர் முன்னிலை வகித்தனர்.இதில், பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு, தன் சுத்தம், கை கழுவும் முறை, குடல் புழுக்களை நீக்கும் வழிமுறைகள், வயிற்றுப்போக்கு தடுக்கும் முறைகள் மற்றும் சத்தானகாய்கறிகள் உற்பத்தி செய்ய, வீட்டுத்தோட்டம் அமைத்தல் குறித்துவிளக்கப்பட்டது,

மேலும், தற்காப்பு, உடல் நலம், மன நல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.தேசிய ஊட்டச்சத்து குழுமம் போஷன் அபியான் திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் கலைவாணி, வட்டார திட்ட உதவியாளர் குப்புசாமி ஆகியோர், ஊட்டச்சத்தின் முக்கியத்துவம், தினமும் அன்றாட உணவில் சத்தான காய்கறிகள், கீரை வகைகள், பழங்களை சேர்த்துக்கொள்ளுதல் மற்றும் இயற்கை உணவு முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.குடிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரபாண்டியன், செவிலியர்கள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக மேற்பார்வையாளர் முத்தம்மாள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஆசிரியர் பயிற்றுனர் நித்யா பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X