விளம்பர விருப்பம் 30 மாணவர்களுக்கு உதவி முன்னாள் மாணவர்கள் தாராளம்

Added : செப் 21, 2022 | |
Advertisement
கோவை : கோவை அவிநாசி ரோட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, பட்டையதலைவர் மயில்சாமி, தலைமை தாங்கினார். புதிய தலைவராக ரவிக்குமார், செயலாளராக சாந்தநரசிம்மன், பொருளாளராக ரமேஷ் மற்றும், 23 செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.கல்லூரியின்
விளம்பர விருப்பம் 30 மாணவர்களுக்கு உதவி முன்னாள் மாணவர்கள் தாராளம்

கோவை : கோவை அவிநாசி ரோட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, பட்டையதலைவர் மயில்சாமி, தலைமை தாங்கினார். புதிய தலைவராக ரவிக்குமார், செயலாளராக சாந்தநரசிம்மன், பொருளாளராக ரமேஷ் மற்றும், 23 செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.கல்லூரியின் முன்னாள் மாணவரும், முன்னாள் போக்குவரத்துத்துறை துணை கமிஷனருமான சண்முகசுந்தரம், புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில், 30 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. வரும் நாட்களில், அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் பயிலும், ஏழை மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் முழுவதையும் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியின் முன்னாள் மாணவர் சங்கமே ஏற்க முடிவெடுக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X