5வது டிவிஷன் கிரிக்கெட்: கே.எப்.சி.சி., அணி வெற்றி| Dinamalar

5வது டிவிஷன் கிரிக்கெட்: கே.எப்.சி.சி., அணி வெற்றி

Added : செப் 21, 2022 | |
கோவை : மாவட்ட அளவிலான ஐந்தாவது டிவிஷன் 'லீக்' போட்டியில், கே.எப்., கிரிக்கெட் கிளப் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2021- 22ம் ஆண்டு, 'காசா கிராண்ட்' டிராபிக்கான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் ஸ்ரீ கிரிக்கெட் கிளப் அணி மற்றும் கே.எப்., கிரிக்கெட் கிளப்

கோவை : மாவட்ட அளவிலான ஐந்தாவது டிவிஷன் 'லீக்' போட்டியில், கே.எப்., கிரிக்கெட் கிளப் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2021- 22ம் ஆண்டு, 'காசா கிராண்ட்' டிராபிக்கான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் ஸ்ரீ கிரிக்கெட் கிளப் அணி மற்றும் கே.எப்., கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஸ்ரீ கிரிக்கெட் கிளப் அணியினர், எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 49.2 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 158 ரன் எடுத்தனர்.அடுத்து களமிறங்கிய கே.எப்., கிரிக்கெட் கிளப் அணியினர், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 34.4 ஓவரில், 4 விக்கெட் இழப்புக்கு, 161 ரன் எடுத்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X