நகை கடன் தள்ளுபடிக்கு பட்டியல் அனுப்ப உத்தரவு

Added : செப் 21, 2022 | |
Advertisement
சென்னை:நகைக் கடன் தள்ளுபடிக்கு தற்காலிகமாக தகுதி பெறும் பயனாளிகளின் பட்டியலை அனுப்பி வைக்குமாறு, மண்டல இணை பதிவாளர் களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 2021ல் நிபந்தனைக்கு உட்பட்டு நகை கடன்களை தள்ளுபடி செய்ய, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கான அரசாணை நவம்பரில் வெளியானது.தகுதியான பயனாளிகளை அடையாளம் காண, பல்வேறு குழுக்கள்

சென்னை:நகைக் கடன் தள்ளுபடிக்கு தற்காலிகமாக தகுதி பெறும் பயனாளிகளின் பட்டியலை அனுப்பி வைக்குமாறு, மண்டல இணை பதிவாளர் களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 2021ல் நிபந்தனைக்கு உட்பட்டு நகை கடன்களை தள்ளுபடி செய்ய, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கான அரசாணை நவம்பரில் வெளியானது.தகுதியான பயனாளிகளை அடையாளம் காண, பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒரு மாவட்ட அதிகாரிகள், வேறு மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, தள்ளுபடி சலுகையை பெறுவதற்காகவே, ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர், வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் நகை கடன் பெற்றது, போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றது உள்ளிட்ட முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.மேலும், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய, 'அரசு ஊழியர்கள், பயிர் கடன் பெற்றவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது' உட்பட பல்வேறு நிபந்தனை கள் விதிக்கப்பட்டன.
அதன் அடிப்படையில், 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நகை கடன்கள் பெற்றிருந்த நிலையில், 6,000 கோடி ரூபாய் அளவுக்கு ,14.40 லட்சம் பேரின் நகை கடன்களை மட்டும் தள்ளுபடி செய்ய, கூட்டுறவு துறை உத்தரவிட்டது. அந்த பயனாளிகளிடம் இந்தாண்டு பிப்ரவரி இறுதியில் இருந்து, நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட சான்று மற்றும் நகை திரும்ப வழங்கும் பணி துவங்கியது.
தள்ளுபடி கிடைக்காத பலரும் வங்கிகளை முற்றுகையிட்டு, தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்தனர். இதற்கு, 'உரிய ஆவணங்களை வழங்கினால் பரிசீலனை செய்யப்படும்' என, கூட்டுறவு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.பலரும், 'ஆதார்' அட்டை உள்ளிட்ட கூடுதல் ஆவணங்களை வழங்கினர். அதன் அடிப்படையில் சிலர் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதி பெறும் சூழல் உருவாகிஉள்ளது.
அவர்களின் நகை கடன்களையும் தள்ளுபடி செய்ய, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கையில், 'அரசாணையின்படி அமைக்கப்பட்ட குழுக்கள் கண்டறிந்த, தள்ளுபடிக்கு தற்காலிகமாக தகுதி பெறும் பயனாளிகள் பட்டியலை அனுப்பி வைக்கவும்' என, கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X