இயற்கை விவசாய உற்பத்திக்கு கோயம்பேடில் தனி அங்காடி

Added : செப் 21, 2022 | |
Advertisement
சென்னை :இயற்கை முறை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு கோயம்பேடு சந்தையில் தனி கடைகள் ஒதுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.சென்னையில் கொத்தவால் சாவடி நெரிசலுக்கு தீர்வாக கோயம்பேடில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவற்றுக்கான மொத்த விற்பனை அங்காடி வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி, கோயம்பேட்டில், 295 ஏக்கர் பரப்பளவில் மொத்த விற்பனை அங்காடி

சென்னை :இயற்கை முறை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு கோயம்பேடு சந்தையில் தனி கடைகள் ஒதுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.சென்னையில் கொத்தவால் சாவடி நெரிசலுக்கு தீர்வாக கோயம்பேடில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவற்றுக்கான மொத்த விற்பனை அங்காடி வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி, கோயம்பேட்டில், 295 ஏக்கர் பரப்பளவில் மொத்த விற்பனை அங்காடி அமைக்கப்பட்டது.இங்கு, 3,200 கடைகள் கட்டப்பட்டு வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் இங்கு வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் கோயம்பேடு சந்தை வளாகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை சென்னை பெருநகர மேம்பாட்டு குழுமம் எனப்படும் சி.எம்.டி.ஏ., செயல்படுத்தி வருகிறது. இதில், நெரிசலை குறைப்பதற்கு பல்வேறு புதிய வழிமுறைகளை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். அத்துடன், முழுவதும், 'ஆர்கானிக்' என்று கூறப்படும் இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு கோயம்பேடு சந்தையில் தனியாக கடைகளை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து தோட்டகலைத்துறையுடன் இணைந்து சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முதல்கட்ட ஆய்வு பணிகளை முடித்துள்ளனர்.எந்த பகுதியில், எத்தனை கடைகளை இதற்கு ஒதுக்கலாம் என்பதற்கான ஆலோசனை உயரதிகாரிகள் நிலையில் நடந்து வருகிறது.விரைவில் இது தொடர்பான புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X