1,000 இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம்

Updated : செப் 22, 2022 | Added : செப் 21, 2022 | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுடன், டெங்கு, பன்றிக்காய்ச்சல் அதிகரித்து வருவதால், 1,000 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.தமிழகத்தில், கொரோனா தொற்று முழுமையாக குறையாத நிலையில், தினசரி 500 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அந்த வரிசையில் பருவ கால காய்ச்சலான 'எச்1என்1 இன்ப்ளூயன்சா, டெங்கு' போன்றவை மாநிலம் முழுதும் அதிகரித்து வருகிறது.இவ்வகை காய்ச்சல்களால், தினசரி
1,000 இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுடன், டெங்கு, பன்றிக்காய்ச்சல் அதிகரித்து வருவதால், 1,000 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில், கொரோனா தொற்று முழுமையாக குறையாத நிலையில், தினசரி 500 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அந்த வரிசையில் பருவ கால காய்ச்சலான 'எச்1என்1 இன்ப்ளூயன்சா, டெங்கு' போன்றவை மாநிலம் முழுதும் அதிகரித்து வருகிறது.இவ்வகை காய்ச்சல்களால், தினசரி 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதம் பாதிப்பு என்றாலும், டெங்கு, கொரோனா, பன்றிக்காய்ச்சல் மூன்றும், ஒருவரிடமிருந்து மற்ற வர்களுக்கு எளிதில் தொற்றக்கூடியது. இதனால், தடுப்பு நடவடிக்கையை பொது சுகாதாரத் துறை முடுக்கி விட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் 100 இடங்கள் உட்பட, மாநிலம் முழுதும், 1,000 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நேற்று நடந்தது.இந்த முகாமில், காய்ச்சல், சளி, தலை வலி, உடல் சோர்வு உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளுக்கு, ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X