சிறுமியின் 'வீடியோ' புகார்தேடி வந்து சந்தித்த அதிகாரிகள்

Added : செப் 21, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
கும்மிடிப்பூண்டி, :புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த தியாகராஜன் -- சித்ரா தம்பதி மகள் தீக் ஷா, 10. தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.அவர் வசிக்கும் தெரு, பழுதடைந்து இருப்பதை காண்பித்து, பள்ளிக்கு சென்று வர முடியாத நிலையில் இருப்பதாகவும், தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, கொசு கடிக்கு ஆளாகி
சிறுமியின் 'வீடியோ' புகார்தேடி வந்து சந்தித்த அதிகாரிகள்

கும்மிடிப்பூண்டி, :புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த தியாகராஜன் -- சித்ரா தம்பதி மகள் தீக் ஷா, 10. தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.அவர் வசிக்கும் தெரு, பழுதடைந்து இருப்பதை காண்பித்து, பள்ளிக்கு சென்று வர முடியாத நிலையில் இருப்பதாகவும், தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, கொசு கடிக்கு ஆளாகி வருவதாகவும், தனக்கே உரிய மழலை மொழியில் அவர் பதிவிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

அந்த வீடியோ, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், பார்வைக்கும் சென்றது. கலெக்டர் உத்தரவின்படி, உடனடியாக அந்த தெருவில், 480 மீட்டர் நீளத்திற்கு, பேவர் பிளாக்' சாலை அமைக்க அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 17.61 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. நிதி ஒதுக்கப்பட்ட விபரத்துடன், தாசில்தார் கண்ணன், பி.டி.ஓ., வாசுதேவன் ஆகியோர் சிறுமி தீக் ஷாவை நேற்று காலை சந்தித்தனர்.சிறுமியிடம் விபரத்தை தெரிவித்து, உடனடியாக சாலை அமைக்கப்படும் என உறுதியளித்து, அவரை பாராட்டி சென்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
23-செப்-202220:25:02 IST Report Abuse
Vena Suna சிறுமி சொன்னா கேட்பானுங்க. நாம கத்தோ கத்துன்னு கத்தினாலும் கேட்க மாட்டானுங்க. அது தான் திமுக.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
22-செப்-202220:05:12 IST Report Abuse
Mohan அடடா, 10வயசுப் புள்ளைக்கு நான் எங்க போறது.
Rate this:
Cancel
22-செப்-202212:34:57 IST Report Abuse
Balaji Radhakrishnan Well done Collector and other officers. Ten years old girl took the responsible and complained the problem. Appreciated to the girl and her parents.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X