12 ஆயிரம் வீடுகளுக்கு நிலவேம்பு பவுடர் காய்ச்சலை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை

Added : செப் 21, 2022 | |
Advertisement
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில், பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த, 12 ஆயிரம் வீடுகளுக்கு நிலவேம்பு பவுடர் வினியோகிக்கும் பணி துவங்கியது.திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் 'ப்ளூ' காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. குழந்தைகள், பெரியோர் என, அனைத்து தரப்பினரும், காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.காய்ச்சலை கட்டுப்படுத்த, நகராட்சி சார்பில், வீடு
12 ஆயிரம் வீடுகளுக்கு நிலவேம்பு பவுடர் காய்ச்சலை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில், பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த, 12 ஆயிரம் வீடுகளுக்கு நிலவேம்பு பவுடர் வினியோகிக்கும் பணி துவங்கியது.

திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் 'ப்ளூ' காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. குழந்தைகள், பெரியோர் என, அனைத்து தரப்பினரும், காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.காய்ச்சலை கட்டுப்படுத்த, நகராட்சி சார்பில், வீடு தோறும் நிலவேம்பு பவுடர் வழங்கும் பணி துவங்கியது.

சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமையிலான ஊழியர்கள், வீடு தோறும் சென்று, நிலவேம்பு பொடி பாக்கெட்டுகளை வினியோகம் செய்து வருகின்றனர்.இதுகுறித்து ஆணையர் ராஜலட்சுமி கூறியதாவது:திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில், மக்களுக்கு 'ப்ளூ' காய்ச்சல் அச்சம் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலான குழந்தைகள் காய்ச்சல், சளி காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து, காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், 12 ஆயிரம் வீடுகளுக்கும், தலா 50 கிராம் நிலவேம்பு பவுடர் அடங்கிய பாக்கெட் வினியோகிக்கப்பட்டு வருகிறது.பொதுமக்கள் இதை சுடுநீரில் கொதிக்கவைத்து, தொடர்ந்து மூன்று நாட்கள் அருந்தினால், காய்ச்சல் கட்டுக்குள் வரும். மேலும், காய்ச்சப்பட்ட நிலவேம்பு கஷாயமும், சுகாதார ஊழியர்கள் வாயிலாக, வார்டு தோறும் சென்று வினியோகிக்கப்பட உள்ளது.இவ்வாறு ஆணையர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X