சீக்கனா ஏரி ரூ.25 லட்சத்தில் சீரமைப்புஆக்கிரமிப்பை அகற்றவும் கோரிக்கை

Added : செப் 21, 2022 | |
Advertisement
முடிச்சூர்:முடிச்சூர் சீக்கனா ஏரியின் ஒரு பகுதியை, 25 லட்சம் ரூபாய் செலவில் துார் வாரி, ஆழப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. அதே நேரத்தில், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில், தாம்பரம்- - முடிச்சூர் சாலையை ஒட்டி, சீக்கனா ஏரி உள்ளது. பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, 26 ஏக்கர்
சீக்கனா ஏரி ரூ.25 லட்சத்தில் சீரமைப்புஆக்கிரமிப்பை அகற்றவும் கோரிக்கை

முடிச்சூர்:முடிச்சூர் சீக்கனா ஏரியின் ஒரு பகுதியை, 25 லட்சம் ரூபாய் செலவில் துார் வாரி, ஆழப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. அதே நேரத்தில், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில், தாம்பரம்- - முடிச்சூர் சாலையை ஒட்டி, சீக்கனா ஏரி உள்ளது. பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, 26 ஏக்கர் பரப்பளவு கொண்டது.வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலை அமைக்கும் போது, சாலை பணிக்காக ஏரியின் மையப் பகுதியில் இருந்து, 9 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.இதனால் ஏரி, 13 ஏக்கர் ஒருபுறம், 4 ஏக்கர் மறுபுறம் என, இரண்டாக பிரிந்து விட்டது. ஒவ்வொரு மழையிலும், இரு பகுதிகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால், பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படுகின்றன.

இதை கருத்தில் கொண்டு, இந்தாண்டு பருவ மழைக்கு முன், இந்த ஏரியை துார் வாரி, ஆழப்படுத்த வேண்டும் என, முடிச்சூர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், வெளிவட்ட சாலையின் மேற்கு பகுதியில் உள்ள ஏரியை, 25 லட்சம் ரூபாய் செலவில் துார் வாரி ஆழப்படுத்துதல், கரையை பலப்படுத்தி கருங்கற்கள் பதித்தல், கலங்கல் கட்டுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

இப்பணிகள், துவக்கப்பட்டன. அதேநேரத்தில், இந்த ஏரியில் ஆக்கிரமிப்புகள் என்பது அதிகமாக உள்ளது.ஆக்கிரமிப்புகளை விட்டு விட்டு, ஏரியை ஆழப்படுத்துவதில் எவ்வித பயனும் இல்லை. மாறாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாக அமைந்து விடும்.எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, ஏரியின் முழு பரப்பளவிற்கும் துார் வாரி ஆழப்படுத்தினால் மட்டுமே, மழைநீரை சேமிக்க முடியும். எனவே, இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X