ஜி.ஆர்.டி சி.பி.எப்., - செயின்ட் ஜோசப் 'சாம்பியன்'

Added : செப் 21, 2022 | |
Advertisement
கோவை : சூலுார் குறுமயை பள்ளிகளுக்கு உட்பட்ட தடகள போட்டி மாணவர்கள் பிரிவில், நீலம்பூர் ஜி.ஆர்.டி சி.பி.எப்., பள்ளி அணியும்; மாணவிகள் பிரிவில் சோமனுார் செயின்ட் ஜோசப் பள்ளி அணியும், சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றன.கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் இடையர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், சூலுார் குறுமையங்களுக்கு உட்பட்ட, பள்ளி மாணவ- மாணவிகளுக்கான தடகள போட்டி

கோவை : சூலுார் குறுமயை பள்ளிகளுக்கு உட்பட்ட தடகள போட்டி மாணவர்கள் பிரிவில், நீலம்பூர் ஜி.ஆர்.டி சி.பி.எப்., பள்ளி அணியும்; மாணவிகள் பிரிவில் சோமனுார் செயின்ட் ஜோசப் பள்ளி அணியும், சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றன.கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் இடையர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், சூலுார் குறுமையங்களுக்கு உட்பட்ட, பள்ளி மாணவ- மாணவிகளுக்கான தடகள போட்டி கோவை, நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர்.


14 வயது பிரிவு


மாணவர்கள் பிரிவில் நீலம்பூர் ஜி.ஆர்.டி சி.பி.எப்., பள்ளியின் யோகிஸ் 15 புள்ளிகளுடனும், மாணவிகள் பிரிவில் கொங்கு வேளாளர் பள்ளியின் மதுமிதா 10 புள்ளிகளுடனும், தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.


17 வயது பிரிவு


மாணவர்கள் பிரிவில் நீலம்பூர் ஜி.ஆர்.டி சி.பி.எப்., பள்ளியின் ரிஷிவர்தன் 15 புள்ளிகளுடனும்; மாணவிகள் பிரிவில் எஸ்.ஆர்.என்.வி., கீர்த்தனா 15 புள்ளிகளுடனும், தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.


19 வயது பிரிவு


மாணவர்கள் பிரிவில் கதிரி மில்ஸ் பள்ளியின் கமலேஷ் 13 புள்ளிகளுடனும்; மாணவிகள் பிரிவில் கதிர் மில்ஸ் பள்ளியின் சுபாஷினி 15 புள்ளிகளுடனும், தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.போட்டியின் முடிவில் மாணவர்கள் பிரிவில், நீலம்பூர் ஜி.ஆர்.டி சி.பி.எப்., பள்ளி அணி, 109 புள்ளிகளுடனும், மாணவிகள் பிரிவில் சோமனுார் செயின்ட் ஜோசப் பள்ளி அணியினர், 56 புள்ளிகளுடனும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X