பாட்டி அடித்துக் கொலைநாடகமாடிய பேரன் கைது

Added : செப் 21, 2022 | |
Advertisement
கொருக்குப்பேட்டை கொருக்குப்பேட்டையில், பாட்டியை அடித்து கொன்று விட்டு நாடகமாடிய பேரனை போலீசார் கைது செய்தனர்.கொருக்குப்பேட்டை, கண்ணகி நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் விசாலாட்சி, 70. இவருக்கு இரு மகள்களும், இரு மகன்களும் உள்ளனர்.செங்குன்றம், காந்தி நகர், நேரு தெருவில் இவரது கடைசி மகள் அமுதா வசிக்கிறார். இவரது மகன் சதீஷ், 36.அமுதாவிற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன், புதிதாக


கொருக்குப்பேட்டை கொருக்குப்பேட்டையில், பாட்டியை அடித்து கொன்று விட்டு நாடகமாடிய பேரனை போலீசார் கைது செய்தனர்.கொருக்குப்பேட்டை, கண்ணகி நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் விசாலாட்சி, 70. இவருக்கு இரு மகள்களும், இரு மகன்களும் உள்ளனர்.செங்குன்றம், காந்தி நகர், நேரு தெருவில் இவரது கடைசி மகள் அமுதா வசிக்கிறார். இவரது மகன் சதீஷ், 36.அமுதாவிற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன், புதிதாக வீடு கட்ட ஒன்றரை லட்சம் ரூபாயும், 5 சவரன் நகையும் கடனாக விசாலாட்சி தந்துள்ளார்.

இதில், ஒரு லட்சம் ரூபாய் மட்டும் விசாலாட்சிக்கு திருப்பி தந்துள்ளார். மீதமுள்ள பணம் மற்றும் நகையை கேட்டு அமுதாவிற்கு, விசாலாட்சி நெருக்கடி கொடுத்தார்.அமுதா வீட்டிற்கு சென்று, தொடர்ந்து பணத்தைக் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். பக்கத்து வீட்டில் வசிப்போர் முன் விசாலாட்சி திட்டியதால், அமுதா மன உளைச்சலடைந்துள்ளார். இது குறித்து, மகன் சதீஷிடம் கூறி அழுதுள்ளார்.ஆத்திரமடைந்த சதீஷ், நேற்று முன்தினம் மாலை பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.பேரன் வந்த பாசத்தில், விசாலாட்சி கருவாடு குழம்பு வைத்து சாப்பாடு போட்டுள்ளார். சதீஷும் சாப்பிட்டுள்ளார். அப்போது விசாலாட்சி, அமுதா வாங்கிய கடன் குறித்து பேசினார். பணத்தை வாங்கி அமுதா ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்தார்.ஆத்திரமடைந்த சதீஷ், விசாலாட்சியை பிளேடால் கிழித்து பின் சுத்தியலால் அடித்து கொன்றார். பின் அமுதாவிற்கு, பாட்டியை யாரோ அடித்துக் கொன்று விட்டதாக மொபைல் போனில் தகவல் தெரிவித்துள்ளார்.அதே நேரம் விசாலாட்சியின் குரல் கேட்டு அருகில் வசிப்பவர்கள், கதவை தட்டி உள்ளனர். பின் அரை மணி நேரம் கழித்து கதவை திறந்த சதீஷ், அவர்களிடம் பாட்டி கடைக்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.பின், வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள நடைபாதை கடையில், புதிய சட்டை வாங்கியுள்ளார்.

தன் ரத்தக்கறை படிந்த சட்டையை மாற்றி அருகில் உள்ள கூவம் ஆற்றில் போட்டு சென்றுள்ளார்.அமுதா வந்ததும், இருவரும் விசாலாட்சியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் விசாலாட்சி இறந்தது தெரிய வந்தது.தகவலறிந்த ஆர்.கே.நகர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில், கொலை செய்து விட்டு சதீஷ் நாடகமாடியது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X